முதல்வர் சந்திப்பு எதிரொலி: அய்யாக்கண்ணுவின் சென்னை போராட்டம் வாபஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு தலைமையில் 41 நாட்கள் டெல்லியில் போராட்டம் நடைபெற்ற நிலையில் நேற்று முதல் சென்னையிலும் அய்யாக்கண்ணு தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் தொடங்கியது. சென்னை சேப்பாக்கத்தில் முதல் நாள் அரைநிர்வாண போராட்டமாக தொடங்கிய நிலையில் இன்று காலை முதலமைச்சரிடம் இருந்து வந்த அழைப்பை அடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை அய்யாக்கண்ணு தலைமையிலான குழு சந்தித்தது.
இந்த சந்திப்பின்போது விவசாயிகளின் கோரிக்கைகள் பலவற்றின் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விவசாயிகளுக்கு ஓய்வூதியம் முன்னுரிமை அடிப்படையில் வழங்குவதாகவும், ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வழங்கப்பட வேண்டிய 1.5 கோடி ரூபாய் வழங்குவதாகவும் முதல்வர் உறுதிமொழி கூறியதாகவும் தெரிவித்ததை அடுத்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
மேலும் முதல்வர் தன்னுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவ்ர் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com