2 ரூபாய்க்கு கொரோனா மருந்து: தமிழக டாக்டர் சாதனை

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் லட்சக்கணக்கில் செலவு செய்து வருவதும், அவ்வாறு செலவு செய்தாலும் ஒருசிலர் உயிர் பிழைக்க முடியாத நிலை ஏற்பட்டு வரும் நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் கொரோனாவை குணப்படுத்தும் மருந்தை 2 ரூபாய்க்கு கண்டுபிடித்துள்ளதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் வசந்தகுமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘கொரோனா வைரஸ்க்கு தான் மருந்து கண்டுபிடித்து உள்ளதாகவும் இதுகுறித்த ஆராய்ச்சி கட்டுரைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு அனுப்பி உள்ளதாகவும் ஆனால் தனது கட்டுரை மீது எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார். எனவே தனது மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க மத்திய அரசுக்கும், இந்திய ஆராய்ச்சி மருத்துவ கவுன்சிலுக்கும் உத்தரவிட வேண்டும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ’தனது மனுதாரர் கண்டுபிடித்துள்ள மருந்து சார்ஸ் மற்றும் கொரோனா வைரஸ் உடல் செல்களில் நுழைய விடாமல் தடுக்கும் தன்மை கொண்டது என்றும் இந்த மருந்தின் விலை ரூபாய் இரண்டு மட்டுமே என்றும் இந்த மருந்தை உட்கொண்டால் கொரோனா நோய் வராமல் தடுக்கப்படும் என்றும் இதனால் ஏழை எளியோர்களுக்கு பயன் அளிக்கும் என்றும் வாதிட்டார்

இதனையடுத்து இந்த மருந்து குறித்து ஆய்வு செய்வதற்காக ஆய்வு அறிக்கையை மனுதாரர் மீண்டும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கும் மத்திய அரசுக்கும் மனுதாரர் அனுப்ப வேண்டும் என்றும் இந்த ஆய்வு அறிக்கையை உடனடியாக மருத்துவ கவுன்சில் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்

தமிழக டாக்டரின் இந்த கண்டுபிடிப்பு நடைமுறைக்கு வந்தால் கொரோனா வைரஸ் இந்தியாவில் இருந்து மட்டுமின்றி உலகில் இருந்தே விரட்டப்பட்டுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது

More News

டிக்டாக் வீடியோவுக்காக மீனை விழுங்கிய வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்

டிக்டாக்கில் வீடியோ பதிவு செய்து அதிக லைக்ஸ்களை பெறுவதற்காக பலர் ரிஸ்க் எடுத்து வருவதால் பெரும் விபரீதங்களும் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்

கொரோனா வைரஸ் பயம்: ஊரை மாற்றிய ஸ்ருதிஹாசன்

தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் உலக நாயகன் கமலஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன்

கொரோனா பரிசோதனை செய்தாலே தனிமை: அரசின் அதிரடி அறிவிப்பால் சென்னை மக்கள் அதிர்ச்சி

கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் இன்று கூட தமிழகத்தில் 1875 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்

ராயபுரம் ஹோமில் 42 குழந்தைகளுக்கு கொரோனா: ராகவா லாரன்ஸ் உதவி

இந்த கொரோனா வைரஸ் நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என கோடிக்கணக்கில் தனது சொந்த பணத்தை நடிகர் ராகவா லாரன்ஸ்

தமிழகத்தில் வீரியம் ஆகியுள்ள கொரோனா வைரஸ்: அமைச்சர் அதிர்ச்சித் தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வரை தினந்தோறும் மூன்று இலக்கத்தில் இருந்த கொரோனாவின் பாதிப்பு தற்போது கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்