close
Choose your channels

அடுத்தடுத்த வாரங்களில் அதிமுக, திமுக பொதுக்குழு கூட்டங்கள்

Monday, December 26, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தின் இருபெரும் கட்சிகளாக விளங்கி வரும் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளின் பொதுக்குழு கூட்டங்கள் அடுத்தடுத்து நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா வகித்து வந்த அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு புதிய நபரை தேர்வு செய்வதற்காக வரும் 29ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் டிசம்பர் 29ஆம் தேதி நடைபெறவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சற்று முன்னர் திமுகபொதுக்குழு கூட்டம் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் வரும் ஜனவரி 4ஆம் தேதி திமுக பொதுக்குழு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் சமீபத்தில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொள்வார் என்றும் அவருடைய தலைமையில்தான் இந்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.