அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!
- IndiaGlitz, [Monday,March 08 2021]
சமீபத்தில் தல அஜித் தமிழ்நாடு அளவில் நடந்த 46-வது துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை குவித்தார் என்ற செய்தி வெளியானது என்பதையும் இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது என்பதும் தெரிந்ததே
மேலும் அவர் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பைக் ரேஸ், கார் ரேஸ் உள்பட பல துறைகளில் தனது முத்திரையை பதித்துள்ள அஜித், தற்போது துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வெள்ளி பதக்கங்களை வென்றது அஜித் ரசிகர்களுக்கு பெருமையான ஒன்றாக கருதப்பட்டது
இந்த நிலையில் அஜித்தின் இந்த சாதனையை அடுத்து அவருக்கு திரையுலகினர் மற்றும் அரசியல்வாதிகள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். அந்த வகையில் சற்று முன் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தனது டுவிட்டரில் அஜீத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் அந்த வாழ்த்து அவர் கூறியிருப்பதாவது:
தனது அயராத உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளில் சாதித்துவரும் அன்புச்சகோதரர் திரு.அஜீத்குமார் அவர்கள் சென்னையில் நடைபெற்ற 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றிருப்பதில் மகிழ்ச்சி. அவருக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள்
தனது அயராத உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளில் சாதித்துவரும் அன்புச்சகோதரர் திரு.அஜீத்குமார் அவர்கள் சென்னையில் நடைபெற்ற 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றிருப்பதில் மகிழ்ச்சி. அவருக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள்! pic.twitter.com/ZPfbY08uzJ
— O Panneerselvam (@OfficeOfOPS) March 8, 2021