அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!

  • IndiaGlitz, [Monday,March 08 2021]

சமீபத்தில் தல அஜித் தமிழ்நாடு அளவில் நடந்த 46-வது துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை குவித்தார் என்ற செய்தி வெளியானது என்பதையும் இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது என்பதும் தெரிந்ததே

மேலும் அவர் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பைக் ரேஸ், கார் ரேஸ் உள்பட பல துறைகளில் தனது முத்திரையை பதித்துள்ள அஜித், தற்போது துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வெள்ளி பதக்கங்களை வென்றது அஜித் ரசிகர்களுக்கு பெருமையான ஒன்றாக கருதப்பட்டது

இந்த நிலையில் அஜித்தின் இந்த சாதனையை அடுத்து அவருக்கு திரையுலகினர் மற்றும் அரசியல்வாதிகள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். அந்த வகையில் சற்று முன் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தனது டுவிட்டரில் அஜீத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் அந்த வாழ்த்து அவர் கூறியிருப்பதாவது:

தனது அயராத உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளில் சாதித்துவரும் அன்புச்சகோதரர் திரு.அஜீத்குமார் அவர்கள் சென்னையில் நடைபெற்ற 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றிருப்பதில் மகிழ்ச்சி. அவருக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள்

More News

கொரோனா பாதிப்புக்கு பின் ஜோதிகாவுடன் சூர்யா கலந்து கொண்ட நிகழ்ச்சி!

நடிகர் சூர்யா கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார் என்றும் அதன் பின்னர் எடுத்துக்கொண்ட சிகிச்சையின் காரணமாக கொரோனாவில் இருந்து குணமாகினார்

குடும்பப்பாங்காக நடிக்கும் சீரியல் நடிகையா இவர்? வைரலாகும் வேற லெவல் போட்டோஷூட்!

மெட்டி ஒலி, கோலங்கள், வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களிலும் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்த நடிகை ஒருவரின் போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தாய் சேய் இருவருக்கும்… கேப்டன் விராட் கோலியின் வேற லெவல் மகளிர் தின வாழ்த்து!

இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

புல்வெளி படுக்கை… வைல்ட் விலங்குடன் வீடியோ ஷுட் நடத்திய மாஸ்டர் பட நடிகை!

தளபதி விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் திரைப்படம் 50 நாட்களைத் தாண்டியும் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஷாலு ஷம்முவை படுக்கைக்கு அழைத்த அந்த 'பெரிய நடிகர்' யார்?

கடந்த சில ஆண்டுகளாக கோலிவுட் முதல் ஹாலிவுட் வரையிலான நடிகைகள் தங்களை படுக்கைக்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அழைத்ததாக மீடூ குற்றச்சாட்டை தெரிவித்து வந்தனர்