14 வருடம் கழித்து தமிழக கிரிக்கெட் அணி வெற்றிக் கோப்பை! தளபதி பாடலுக்கு நடனம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
செய்யது முஸ்டாக் அலி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி கடந்த 14 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. கடந்த ஜனவரி 10 ஆம் தேதி முதல் கொல்கத்தாவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டி தொடரின் இறுதி போட்டி நேற்று இரவு நடைபெற்றது. அதில் பரோடா அணிக்கு எதிராக களம் இறங்கிய தமிழக அணி, நிர்ணயித்த இலக்கை 18 ஓவர்களில் முறியடித்து கோப்பையை கைப்பற்றி உள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற முஸ்டாக் அலி கோப்பை போட்டியில் கர்நாடக அணி வீரர்களுடன் தோல்வியை சந்தித்த தமிழக அணி தற்போது கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. இத்தொடரில் களம் இறங்கிய தமிழக அணி முதற்கட்டமாக தொடர்ந்து 5 போட்டிகளில் வெற்றிப்பெற்று கால் இறுதிக்கு முன்னேறியது. கால் இறுதிப் போட்டியில் இமாச்சல பிரதேச அணியை வீழ்த்தி அடுத்து அரை இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது. அரை இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி இறுதியாக பரோடா அணியையும் வீழ்த்தி கோப்பையைச் சொந்தமாக்கி இருக்கிறது.
பரோடா அணியுடன் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 9 விக்கெட்டுகளை இழந்த பாரோடா அணி 120 ரன்களை நிர்ணயித்தது. அடுத்ததாக களம் இறங்கிய தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஹரி நிஷாந்த், நாராயணன் ஜெகதீசன் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். அடுத்து பாபா அபராஜித் மற்றும் ஷாருக்கான் ஜோடி 18 ஓவர்களில் நிர்ணயித்த இலக்கை அடைந்து போட்டியை முடித்து வைத்தனர். இதில் சிறந்த வீரராக தமிழக அணியின் வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றிய தமிழக அணி வீரர்கள் தளபதி விஜயின் “வாத்தி கமிங்” பாடலுக்கு நடனம் ஆடி மகிழ்ந்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
Team Work Works
— Arjun Saravanan (@ArjunSaravanan5) February 1, 2021
14 ஆண்டுகளுக்கு பிறகு சையது முஷ்டாக் அலி கோப்பையை வென்ற தமிழக கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துகள் ????
கேப்டன் @DineshKarthik
மற்றும் அணியினரின் வேற லெவல் கொண்டாட்டம். #SyedMushtaqAliT20 #Master #MondayMotivation pic.twitter.com/dX82ltbtvd
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments