14 வருடம் கழித்து தமிழக கிரிக்கெட் அணி வெற்றிக் கோப்பை! தளபதி பாடலுக்கு நடனம்!

  • IndiaGlitz, [Monday,February 01 2021]

செய்யது முஸ்டாக் அலி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி கடந்த 14 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. கடந்த ஜனவரி 10 ஆம் தேதி முதல் கொல்கத்தாவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டி தொடரின் இறுதி போட்டி நேற்று இரவு நடைபெற்றது. அதில் பரோடா அணிக்கு எதிராக களம் இறங்கிய தமிழக அணி, நிர்ணயித்த இலக்கை 18 ஓவர்களில் முறியடித்து கோப்பையை கைப்பற்றி உள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற முஸ்டாக் அலி கோப்பை போட்டியில் கர்நாடக அணி வீரர்களுடன் தோல்வியை சந்தித்த தமிழக அணி தற்போது கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. இத்தொடரில் களம் இறங்கிய தமிழக அணி முதற்கட்டமாக தொடர்ந்து 5 போட்டிகளில் வெற்றிப்பெற்று கால் இறுதிக்கு முன்னேறியது. கால் இறுதிப் போட்டியில் இமாச்சல பிரதேச அணியை வீழ்த்தி அடுத்து அரை இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது. அரை இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி இறுதியாக பரோடா அணியையும் வீழ்த்தி கோப்பையைச் சொந்தமாக்கி இருக்கிறது.

பரோடா அணியுடன் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 9 விக்கெட்டுகளை இழந்த பாரோடா அணி 120 ரன்களை நிர்ணயித்தது. அடுத்ததாக களம் இறங்கிய தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஹரி நிஷாந்த், நாராயணன் ஜெகதீசன் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். அடுத்து பாபா அபராஜித் மற்றும் ஷாருக்கான் ஜோடி 18 ஓவர்களில் நிர்ணயித்த இலக்கை அடைந்து போட்டியை முடித்து வைத்தனர். இதில் சிறந்த வீரராக தமிழக அணியின் வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றிய தமிழக அணி வீரர்கள் தளபதி விஜயின் “வாத்தி கமிங்” பாடலுக்கு நடனம் ஆடி மகிழ்ந்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

More News

2021-2022 பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்… சிறப்பு கவனம் எந்த துறைக்கு?

உலகப் பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை நிலவுகிறது எனக் குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.

சென்னை மெட்ரோவுக்கு ரூ.63ஆயிரம் கோடி: மத்திய பட்ஜெட் 2021ன் முக்கிய அம்சங்கள்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பாராளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில் இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் குறித்து தற்போது பார்ப்போம்

ஆளும் பாஜகவின் 9 ஆவது மத்திய பட்ஜெட்! நிலவரம் என்ன?

நடப்பு 2021-22 நிதி ஆண்டுக்காக மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

'தளபதி 65' படத்திலும் தொடரும் காமெடி காம்போ!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் பொங்கல் திருநாளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படம் இரண்டே வாரங்களில் 200 கோடி வசூல் செய்ததை அடுத்து தற்போது

ரசிகர்கள் வேண்டுகோள்: கணவரின் புகைப்படத்தை அப்லோட் செய்த 'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகை!

ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று 'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகை தனது கணவரின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது