தமிழகத்தில் முதல்முறையாக ஒரு லட்சத்தை தாண்டிய கொரோனா: 16 நாட்களில் மட்டும் 50 ஆயிரம்

தமிழகத்தில் நேற்று முதல்முறையாக 4000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் 4000ஐ தாண்டியுள்ளது என்பதும் தமிழகத்தின் மொத்த பாதிப்பு இன்று ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கடைசி 16 நாட்களில் மட்டும் 50 ஆயிரம் பேருக்கு பாதிப்பு என்பதும் அதிர்ச்சிக்குரிய ஒரு தகவல் ஆகும்.

தமிழக சுகாதாரத்துறையின் தகவலின்படி தமிழகத்தில் இன்று 4329 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,02,721 என அதிகரித்துள்ளது

மேலும் சென்னையில் இன்று கொரோனா தொற்றால் 2082 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதனையடுத்து சென்னையில் மொத்தம் 64,689 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவால் 64 பேர் மரணம் அடைந்துள்ளதால் தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1385 ஆக அதிகரித்துள்ளது என்பது அதிர்ச்சிக்குரிய செய்தி ஆகும்.

மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 2357 பேர் குணமடைந்துள்ளனர் என்பது தான் ஒரே ஆறுதல் என்பதும், இதனையடுத்து பேர் மொத்தம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 58,378 பேர்கள் குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று 35,028 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் 12.70.720 பேர்களுக்கு மொத்தம் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

 

More News

கொரோனா விஷயத்தில் மகிழ்ச்சி செய்தி: சுதந்திரத் தினத்தன்று விடிவு வரும்!!! ICMR அறிவிப்பு!!!

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி பற்றிய செய்திகள் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

வெடிமருந்து வைத்து கொல்லப்பட்ட கேரள யானையை போல மேலும் ஒரு துயரச்சம்பவம்!!!

கேரளாவில் கடந்த மாதம் அன்னாசி பழத்தில் வைக்கப் பட்ட வெடிமருந்தால் ஒரு யானை அநியாயமாக உயிரிழந்தது.

நீங்கள்ல்லாம் நல்லா இருப்பிங்களாடா? கவினின் ஆவேச பதிவு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஏழு வயதுச் சிறுமியான ஜெயப்பிரியா, 3 காமக் கொடூரர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

'விக்ரம் 60' படத்திற்காக புதிய லுக்கில் தயாராகும் துருவ்

சியான் விக்ரம் நடித்த 'கோப்ரா' திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ள நிலையில் விக்ரமின் அடுத்த படமான 'விக்ரம் 60' படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளதாகவும்

அவரு என் கழுத்துல கத்திய வச்சாரு... நான் பதறிட்டேன்... அதிர்ச்சி தகவல் வெளியிட்ட  ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்!!!

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூனிஸ் கான் “என் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினார்” என்ற அதிர்ச்சி தகவலை கிரான் ஃபிளவர் தற்போது வெளியிட்டு இருக்கிறார்.