தமிழகத்தில் முதல்முறையாக ஒரு லட்சத்தை தாண்டிய கொரோனா: 16 நாட்களில் மட்டும் 50 ஆயிரம்
- IndiaGlitz, [Friday,July 03 2020]
தமிழகத்தில் நேற்று முதல்முறையாக 4000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் 4000ஐ தாண்டியுள்ளது என்பதும் தமிழகத்தின் மொத்த பாதிப்பு இன்று ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கடைசி 16 நாட்களில் மட்டும் 50 ஆயிரம் பேருக்கு பாதிப்பு என்பதும் அதிர்ச்சிக்குரிய ஒரு தகவல் ஆகும்.
தமிழக சுகாதாரத்துறையின் தகவலின்படி தமிழகத்தில் இன்று 4329 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,02,721 என அதிகரித்துள்ளது
மேலும் சென்னையில் இன்று கொரோனா தொற்றால் 2082 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதனையடுத்து சென்னையில் மொத்தம் 64,689 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவால் 64 பேர் மரணம் அடைந்துள்ளதால் தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1385 ஆக அதிகரித்துள்ளது என்பது அதிர்ச்சிக்குரிய செய்தி ஆகும்.
மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 2357 பேர் குணமடைந்துள்ளனர் என்பது தான் ஒரே ஆறுதல் என்பதும், இதனையடுத்து பேர் மொத்தம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 58,378 பேர்கள் குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று 35,028 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் 12.70.720 பேர்களுக்கு மொத்தம் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது