கொரோனா பரிசோதனையில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் தமிழகம்!!! முதல்வரின் அதிரடி நடவடிக்கைகள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் (ஆகஸ்ட் 6) ஒரேநாளில் 80 ஆயிரத்து 864 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது எனத் தமிழகச் சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இதுவரை கொரோனா பரிசோதனையில் இந்த எண்ணிக்கை மிகவும் அதிகம் என்பதும் கவனிக்கத் தக்கது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 30) அன்று ஒரேநாளில் 80 ஆயிரத்து 100 என்ற அளவில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. கொரோனாவின் ஆரம்பத்தில் சென்னையில் அதிகமாக இருந்த கொரோனா பாசிடிவ் எண்ணிக்கை தற்போது 1000 க்கும் கீழே வந்திருக்கிறது. நேற்றைய நிலவரப்படி சென்னையில் கொரோனா பாசிடிவ் எண்ணிக்கை 968 ஆக குறைந்து இருக்கிறது என்பதும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அளவில் கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது எனத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் தரமான சிகிச்சை மற்றும் மருத்துவ நெறிமுறைகளினால் தற்போது குணமாகி வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தமிழகச் சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது. ஆகஸ்ட் மாத நிலவரப்படி 81.4% மக்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்ற தகவலும் வெளியாகி இருந்தது.
மேலும் இந்திய அளவில் கொரோனா பரிசோதனையை அதிகம் மேற்கொள்ளும் மாநிலமாகத் தமிழகம் திகழ்ந்து வருகிறது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரமருடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்து இருந்தார். ஆகஸ்ட் 12 வரை 34,32,025 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. அதைத்தவிர இந்தியாவிலேயே அதிகபட்சமாகத் தமிழகத்தில் 135 கொரோனா பரிசோதனை மையங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. அதில் 61 அரசு பரிசோதனை மையங்கள் மற்றும் 74 தனியார் பரிசோதனை மையங்கள் இருப்பதாக அரசாங்கம் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அதைத்தவிர கொரோனா பயத்தோடு வீட்டில் இருக்கும் மக்களுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் அமல்படுத்தப் பட்டுள்ளன. அந்த வகையில் இணையதளம் மூலம் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறுவதற்கு இ-சஞ்சீவனி திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் கொரோனா நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதற்காக தனி 118 ஆம்புலன்ஸ் சேவையையும் தமிழக முதல்வர் தொடங்கி வைத்து இருக்கிறார். கொரோனா அறிகுறிகளோடு வீட்டுத் தனிமையில் இருப்பவர்களுக்கு ஆலோசனை வழங்க அம்மா கோவிட்-19 திட்டமும் அமல்படுத்தப் பட்டு இருக்கிறது.
மேலும், கொரோனாவிற்குத் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பதற்கு வசதியாகத் தமிழகத்தில் அதிகளவில் அரசு மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளார்கள் என்றும் தமிழக அரசு தகவல் அளித்துள்ளது. அதைத்தவிர மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகள் வலுவாக உள்ள மாநிலமாகத் தமிழகம் திகழ்வதும் மற்றொரு சிறப்பாகப் பார்க்கப்படுகிறது. கொரோனா சிகிச்சையில் பிளாஸ்மா சிகிச்சை முறையும் தமிழகத்தில் கடந்த ஜுலை மாதத்தில் இருந்து தொடங்கப்பட்டுள்ளது. அதிலும் முன்மாதிரி மாநிலமாகத் தமிழகம் இருந்து வருகிறது.
இதைத்தவிர தனித்த வகையில் தமிழகம் சில முன்னேற்பாட்டு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. கொரோனா அறிகுறியின் ஆரம்பக் கட்டத்திலேயே பரிசோதனை மேற்கொள்வது, நோயாளிகளோடு தொடர்புடையவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வது, அதிகம் கொரோனா பாதித்த நபர்களின் பகுதிகளை தீவிரக் கட்டுப்பாட்டு பகுதிகளாக மாற்றுவது, கொரோனா அறிகுறி உள்ளவர்களைத் தனிமைப்படுத்த மையங்களை உருவாக்கி அதில் 300 நபர்களுக்கு ஒரு அதிகாரியையும் பாதுகாப்புக்காக பணி அமர்த்துவது எனப் பல வழிமுறைகளையும் தமிழகம் மேற்கொண்டு வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com