விஜய்யை அடுத்து 'அசுரன்' வசனத்தை கூறிய முதல்வர் ஸ்டாலின்.. வெற்றிமாறனுக்கு கிடைத்த பெருமை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் நடிகர் விஜய், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ‘அசுரன்’ படத்தின் வசனத்தை குறிப்பிட்டு மாணவ மாணவிகளுக்கு அறிவுரை கூறிய நிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களும் அதே வசனத்தை கூறி மாணவ மாணவிகளுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பேசும்போது ’நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள். நன்றாக விளையாடி உடலை உறுதி செய்து கொள்ளுங்கள். அந்த கல்வியின் மூலம் பகுத்தறிவையும் சுயமரியாதையும் வளர்த்துக் கொள்ளுங்கள். அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அந்த படிப்பை வைத்து சிந்தியுங்கள். புதிய புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துங்கள். படிப்பு மட்டும் தான் உங்ககிட்ட இருந்து யாராலும் பிரிக்க முடியாத சொத்து.
உங்கள் படிப்பையும் திறமையும் பார்த்து பெரிய பெரிய கம்பெனிகள் உங்களுக்கு வேலை தருவார்கள். நீங்களே தொழில் தொடங்கி நிறைய பேருக்கு வேலை கொடுக்கலாம். உங்களுடைய மற்ற கவலைகளை போக்க, மற்ற தேவைகளை பூர்த்தி செய்ய நமது திராவிட மாடல் ஆட்சி உள்ளது. இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான் இருக்கும் வரை நீங்கள் எதை பற்றியும் கவலைப்பட வேண்டாம் என்று பேசி உள்ளார்.
படிப்பு தான் உங்கள் சொத்து’ என்ற வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்தில் இடம்பெற்ற வசனத்தை விஜய் கடந்த சில நாட்களுக்கு முன் பேசிய நிலையில் தற்போது தமிழக முக முதல்வர் ஸ்டாலின் அவர்களும் பேசியுள்ளது இயக்குனர் வெற்றிமாறனுக்கு கிடைத்த பெருமையாக கருதப்படுகிறது.
படிப்பு மட்டும்தான் உங்களிடம் இருந்து யாராலும் பிரிக்க முடியாத சொத்து, எதைப் பத்தியும் கவலைப்படாமல் படிங்க - #MKStalin@CMOTamilnadu pic.twitter.com/cdUpvijO5c
— Raj 😷 (@thisisRaj_) June 26, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments