சர்ச்சைக்குரிய திரைப்படத்திற்கு தேசிய விருதா? தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கண்டனம்.!

  • IndiaGlitz, [Friday,August 25 2023]

69 வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் இதில் தமிழில் எதிர்பார்த்த சில படங்கள் விருதுகள் கிடைக்காமல் இருந்தது தமிழக திரை உலகிற்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.

இருப்பினும் மாதவன் நடித்து, இயக்கி தயாரித்த ‘ராக்கெட்டரி’ திரைப்படத்திற்கும், மணிகண்டன் இயக்கிய ’கடைசி விவசாயி’ படத்திற்கும் விருது கிடைத்தது ஆறுதலாக இருந்தது.

இந்த நிலையில் தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் விருது ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற திரைப்படத்திற்கு அறிவிக்கப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது

இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்திற்கு தேசிய விருது கொடுத்ததற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:

69வது தேசிய விருதுகளில் தமிழில் சிறந்த படமாகத் தேர்வாகியிருக்கும் ‘கடைசி விவசாயி’ படக்குழுவினருக்கு என் பாராட்டுகள்! விஜய் சேதுபதி, மணிகண்டன் மற்றும் நல்லாண்டி ஆகியோர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

மேலும், இரவின் நிழல் படத்தில் ‘மாயவா சாயவா’ பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகி விருதை வென்றுள்ள ஸ்ரேயா கோஷல், #கருவறை ஆவணப்படத்துக்காகச் சிறப்புச் சான்றிதழ் வென்றுள்ள இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சிறந்த கல்வித் திரைப்படத்துக்கான பிரிவில் விருதுக்குத் தேர்வாகியுள்ள சிற்பிகளின் சிற்பங்கள் படக்குழுவினர் ஆகிய அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மறுபுறம், சர்ச்சைக்குரிய திரைப்படம் என நடுநிலையான திரைவிமர்சகர்களால் புறக்கணிக்கப்பட்ட திரைப்படத்துக்குத் தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருது அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இலக்கியங்கள், திரைப்படங்களுக்கு அளிக்கும் விருதுகளில் அரசியல் சார்புத்தன்மை இல்லாமல் இருப்பதுதான் அந்த விருதுகளைக் காலங்கடந்தும் பெருமைக்குரியவையாக உயர்த்திப் பிடிக்கும். மலிவான அரசியலுக்காகத் தேசிய விருதுகளின் மாண்பு சீர்குலைக்கப்படக் கூடாது’ என முதல்வர் தெரிவித்துள்ளார்.

More News

49 வருடத்தில் இதுதான் மோசமான அனுபவம்.. ஷங்கர், மணிரத்னம் பட ஒளிப்பதிவாளர் ஆதங்கம்..!

 தன்னுடைய 49 வருடத்தில் இதுதான் மோசமான அனுபவம் என சென்னை விமான நிலையத்தில் தனக்கு நிகழ்ந்தது குறித்து பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் தெரிவித்துள்ளார்.  

சிறந்த படம், சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிப்பு.. தமிழ் ரசிகர்களுக்கு ஏமாற்றமா?

69வது தேசிய விருது இன்று மாலை அறிவிக்கப்படும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதில்  தமிழ் படங்களுக்கு சில

லைகாவின் அடுத்த படம்.. பூஜை விழாவுக்கு வந்த முன்னாள் பிரதமர், முன்னாள் முதல்வர்..!

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தின் பூஜை இன்று நடந்த நிலையில், இந்த பூஜையில்  முன்னாள் பிரதமர் மற்றும் முன்னாள்

'தளபதி 68' படத்தில் இணைகிறாரா 'பீஸ்ட்' நடிகை?  இன்னும் யார் யாரெல்லாம் நடிக்குறாங்க?

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'தளபதி 68' படத்தின் செய்திகள் அவ்வப்போது கசிந்து வருகின்றன

சந்திரனில் வெற்றி, சதுரங்கத்தில் தோல்வி.. உலககோப்பை செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா போராடி தோல்வி..!

கடந்த சில நாட்களாக உலக கோப்பை செஸ் போட்டி நடைபெற்று வந்த நிலையில் இதன் இறுதிப் போட்டி சமீபத்தில் தொடங்கியது என்பதும் இதில் நார்வே நாட்டின் மேக்னஸ் கார்ல்சன்