சர்ச்சைக்குரிய திரைப்படத்திற்கு தேசிய விருதா? தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கண்டனம்.!
Send us your feedback to audioarticles@vaarta.com
69 வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் இதில் தமிழில் எதிர்பார்த்த சில படங்கள் விருதுகள் கிடைக்காமல் இருந்தது தமிழக திரை உலகிற்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.
இருப்பினும் மாதவன் நடித்து, இயக்கி தயாரித்த ‘ராக்கெட்டரி’ திரைப்படத்திற்கும், மணிகண்டன் இயக்கிய ’கடைசி விவசாயி’ படத்திற்கும் விருது கிடைத்தது ஆறுதலாக இருந்தது.
இந்த நிலையில் தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் விருது ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற திரைப்படத்திற்கு அறிவிக்கப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது
இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்திற்கு தேசிய விருது கொடுத்ததற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:
69வது தேசிய விருதுகளில் தமிழில் சிறந்த படமாகத் தேர்வாகியிருக்கும் ‘கடைசி விவசாயி’ படக்குழுவினருக்கு என் பாராட்டுகள்! விஜய் சேதுபதி, மணிகண்டன் மற்றும் நல்லாண்டி ஆகியோர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
மேலும், இரவின் நிழல் படத்தில் ‘மாயவா சாயவா’ பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகி விருதை வென்றுள்ள ஸ்ரேயா கோஷல், #கருவறை ஆவணப்படத்துக்காகச் சிறப்புச் சான்றிதழ் வென்றுள்ள இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சிறந்த கல்வித் திரைப்படத்துக்கான பிரிவில் விருதுக்குத் தேர்வாகியுள்ள சிற்பிகளின் சிற்பங்கள் படக்குழுவினர் ஆகிய அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மறுபுறம், சர்ச்சைக்குரிய திரைப்படம் என நடுநிலையான திரைவிமர்சகர்களால் புறக்கணிக்கப்பட்ட திரைப்படத்துக்குத் தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருது அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இலக்கியங்கள், திரைப்படங்களுக்கு அளிக்கும் விருதுகளில் அரசியல் சார்புத்தன்மை இல்லாமல் இருப்பதுதான் அந்த விருதுகளைக் காலங்கடந்தும் பெருமைக்குரியவையாக உயர்த்திப் பிடிக்கும். மலிவான அரசியலுக்காகத் தேசிய விருதுகளின் மாண்பு சீர்குலைக்கப்படக் கூடாது’ என முதல்வர் தெரிவித்துள்ளார்.
#69thNationalFilmAwards -இல் தமிழில் சிறந்த படமாகத் தேர்வாகியிருக்கும் #கடைசிவிவசாயி படக்குழுவினருக்கு என் பாராட்டுகள்! @VijaySethuOffl #Manikandan #நல்லாண்டி
— M.K.Stalin (@mkstalin) August 24, 2023
மேலும், #இரவின்நிழல் படத்தில் ‘மாயவா சாயவா’ பாடலுக்காகச் சிறந்த பின்னணிப் பாடகி விருதை வென்றுள்ள @shreyaghoshal,… pic.twitter.com/Bc2veRY5gs
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com