மாற்றுத்திறனாளி திருமூர்த்தி பாடலை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தல அஜித் நடித்த ’விஸ்வாசம்’ படத்தில் இடம்பெற்ற ’கண்ணான கண்ணே’ என்ற பாடலை பாடி சமூக வலைதளங்களில் பிரபலம் ஆனவர் மாற்றுத்திறனாளி திருமூர்த்தி என்பதும், இதனை அடுத்து இசையமைப்பாளர் இமான் அவர்கள் திருமூர்த்தியை நேரில் அழைத்து தனது அடுத்த படத்தில் பாடுவதற்கு வாய்ப்பு கொடுத்தார் என்பதும் தெரிந்ததே. இதனையடுத்து திருமூர்த்தி தற்போது பல பாடல்களை பாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அவர் பாடிய பாடல் ஒன்றை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ஆம் நாள் இயற்கை பேரிடரின்போது மக்களின் உயிரைக் காப்பதற்காக உயிர்நீத்த காவல்துறையை சேர்ந்த வீரர்களின் நினைவை போற்றும் வகையில் ’வீரவணக்க நாள்’ கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த ஆண்டு வீரவணக்க நாளை முன்னிட்டு ஜிப்ரான் இசையில் திருமூர்த்தி மற்றும் சசிகலா பாடிய பாடல் ஒன்று உருவாகியுள்ளது. இந்த பாடலை தலைமை காவலர் சசிகலா மற்றும் வெஸ்லி ஆகியோர் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வீரவணக்கம் என்ற பெயர் கொண்ட இந்த ஆல்பத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள நிலையில் இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments