ஆஸ்கர் வென்ற இயக்குனருக்கு தமிழக முதல்வர் ரொக்கப்பரிசு: எத்தனை கோடி தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆஸ்கர் விருது பெற்ற தமிழ் இயக்குனருக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று ரொக்க பரிசு வழங்கியுள்ளார்.
சமீபத்தில் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ’தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற தமிழ் ஆவண திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது என்பதும் யானை குட்டி பராமரிப்பாளர்களான பொம்மன், பெள்ளி தம்பதியினர் நடித்திருந்த இந்த படத்தை இயக்குனர் கார்த்திகி என்பவர் இயக்கியிருந்தார் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் ’தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப்படத்தை இயக்கின இயக்குனர் கார்த்திகிக்கு ரூபாய் ஒரு கோடி ரொக்கப்பரிசை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வழங்கியுள்ளார். இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த விழாவில் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை முதல்வர் ஸ்டாலின் இயக்குனர் கார்த்திகிக்கு வழங்கியுள்ளார்.
ஏற்கனவே இந்த படத்தில் நடித்த நட்சத்திரங்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தற்போது ஆஸ்கார் விருது வென்று கார்த்திகி நேற்று இந்தியா திரும்பிய நிலையில் இன்று அவரை நேரில் அழைத்து தனது வாழ்த்துக்களையும் பாராட்டு சான்றிதழையும் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையையும் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout