முதல்வர் ஸ்டாலின் தந்த இன்ப அதிர்ச்சி: நெகிழ்ச்சி அடைந்த தமிழ் இயக்குனர்!

தமிழ் திரைப்பட இயக்குனருக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அளித்த இன்ப அதிர்ச்சியால் அந்த இயக்குனர் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

தமிழ் திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான சீனுராமசாமி நேற்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதனை அடுத்து அவரது மனைவி மற்றும் மகள் அவர் குறித்த புத்தகம் ஒன்றை பரிசாகக் கொடுத்தனர். அந்த புத்தகத்திற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்த்து மடல் எழுதி இருந்தார்

இந்த வாழ்த்து மடலை பார்த்து நெகிழ்ச்சி அடைந்த சீனுராமசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: எனக்கு ஆச்சரிய பரிசு தர இதுநாள் வரை நான் எழுதிய கவிதைகள் அத்துணையும் சேகரித்து எனக்குத் தெரியாமல் நூலாக்கி 'சொல்வதற்கு சொற்கள் தேவையில்லை' என அந்நூலுக்கு என் கவிதையையே தலைப்பிட்டு பிறந்தநாள் பரிசாக மனைவி தர்ஷணாவும் மகள்களும் தந்தனர். இந்நூலுக்கு வாழ்த்து மடல் நம் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ஒரு கணவனுக்கு ஆச்சரியமூட்டும் பரிசு தருவதற்காக ஒரு மனைவி தொகுத்த கவிதை தொகுப்பிற்கு ஊக்கமளித்து பாராட்டி ஒரு கடிதம் தந்து வாழ்த்திய உங்கள் உயர்ந்த உள்ளம் பற்றி நினைப்பதா? அல்லது என் போன்ற கலைஞர்களுக்கு நீங்கள் தரும் இதயபூர்வமான அன்பை எண்ணி நெகிழ்வதா எனத் தெரியவில்லை அய்யா? என்னால் இதை முதலில் நம்ப முடியவில்லை. முதல்வரின் கனிந்த இதயத்திற்கு முன் வணங்கி நிற்கிறேன்.

மேலும், அணிந்துரை தந்தவர் கவிப்பேரரசு வைரமுத்து கவிஞரும் தன் பங்களிப்பாக ஆயிரம் மலர்களை சொற்களாக்கி சூடிவிட்டார். உங்கள் கருத்த கைகளை முத்தமிடுகிறேன் கவிஞரே.. கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், சத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் மரிய சீனாஜான்சன்

என் வாழ்நாளில் சிறப்பான நினைவு பரிசினை தந்த உங்களுக்கு இதய நன்றிகள். நூலினை வீட்டிற்கே வந்து வெளியிட்டவர் நடிகர் மோகன் அதுவும் தீடீரென்று.. என் காதலுக்குரியவர் அவருக்கு என் இதய நன்றிகள். ஆச்சர்யம் அதிர்ச்சியாயிற்று. திக்குமுக்காடிப்போனேன். அன்பு நன்றி''

இவ்வாறு சீனுராமசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.