12ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடுவது இப்படித்தான்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கு இப்படித்தான் என முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார். முதல்வர் அறிவித்துள்ள 12ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து தற்போது பார்ப்போம்.

* 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 50 சதவீத மதிப்பெண் கணக்கிடப்படும். அதிக மதிப்பெண் பெற்ற மூன்று பாடங்களில் சராசரி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

* 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 20 சதவீத மதிப்பெண் கணக்கிடப்படும். ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற எழுத்துமுறை மதிப்பெண்கள் மட்டும் கணக்கிடப்படும்.

* 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அகமதிப்பீட்டில் பெற்ற 10 மதிப்பெண்கள் முழுவதுமாக கணக்கிடப்படும். செய்முறை தேர்வு இல்லாத பாடங்களில் அகமதிப்பீட்டில் பெற்ற மதிப்பெண் 30 மதிப்பெண்களுக்காக மாற்றப்பட்டு கணக்கிடப்படும்.

* செய்முறை தேர்வு இல்லாத மாணவர்களுக்கு அகமதிப்பீடு 30 மதிப்பெண் மாற்றம் செய்யப்படும்

மேலும் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தந்த அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் கணக்கீட்டு முறையில் மதிப்பெண் குறைவாக இருப்பதாக கருதினால் பிளஸ்-2 தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் தனித்தேர்வர்களுக்கு கொரோனா தொற்று குறைந்தவுடன் தக்க சமயத்தில் தேர்வு நடத்தப்படும் என்றும் தனித்தேர்வர்களுக்கான தேர்வு கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்

 

More News

வரலாற்று முக்கியத்தும் கொண்ட ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கின் தீர்ப்பு!

அமெரிக்காவில் இனவெறி தாக்குதலில் சிக்கி உயிரிழந்த ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு மீதான தீர்ப்பு இன்று வெளியாகி உள்ளது

தமிழகத்தில் 6- ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு....!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், சுமார் 5,755  நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசிக்கு பதிலாக வெற்று ஊசியை செலுத்திய நர்ஸ்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

பீகார் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும்போது அவசரத்தில் செவிலியர் ஒருவர் வெற்று ஊசியை இளைஞர் ஒருவருக்கு செலுத்தி உள்ளார்.

கர்ப்பிணி பெண்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்… சுகாதாரத்துறை தகவல்!

கர்ப்பிணி பெண்களும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என மத்தியச் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

கேப்டனுடன் மலரும் நினைவுகள்: நடிகை நதியாவின் நெகிழ்ச்சி பதிவு

தமிழ் திரையுலகில் கடந்த 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை நதியா என்பது அனைவரும் அறிந்ததே. அதன் பின்னர் அவர் திருமணத்திற்கு பின் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டாலும்,