முதல்வர் ஸ்டாலின் - தளபதி விஜய் திடீர் சந்திப்பு: வைரல் புகைப்படங்கள்!
- IndiaGlitz, [Wednesday,April 06 2022]
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் தளபதி விஜய் ஆகிய இருவரும் இன்று திடீரென சந்தித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர் கல்பாத்தி குடும்பத்தை சேர்ந்த அர்ச்சனா கல்பாதிக்கும், ராகுல் என்பவருக்கும் இன்று சென்னையில் திருமணம் நடைபெறுகிறது
இந்த திருமண விழாவிற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் தளபதி விஜய் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். திருமண மண்டபத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் விஜய் ஆகிய இருவரும் எதிரெதிராக வந்து சந்தித்து கொண்டதை அடுத்து ஒருவரை ஒருவர் கைகூப்பி வணக்கம் தெரிவித்துக் கொண்டனர். இதுகுறித்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.