14 மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகள்… தமிழகத்தை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்செல்லும் தமிழக முதல்வர்!!!

 

கொரோனாவால் வீழ்ந்த பொருளாதாரத்தை குறைந்த நாட்களிலேயே சரிசெய்வதற்குத் தமிழக முதல்வரின் நடவடிக்கைகளே காரணம் எனப் புகழப்படுகிறது. இதற்காக வெளிநாடுகளில் இருந்தும் இந்திய தொழில் நிறுவனங்களில் இருந்தும் அதிக முதலீடுகளை ஈர்த்து தமிழகத்தில் புதிய உற்பத்தித் தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்கு வாய்ப்பு எற்படுத்திக் கொடுத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மேலும் தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் பல்வேறு தொழில் நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் மேற்கொண்டார்.

அந்த வகையில் தற்போது தமிழகத்தின் 14 மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்கு தமிழக முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதனால் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்க முடியும் எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதற்காக ரூ.10 ஆயிரத்து 55 கோடி மதிப்பில் முதலீடுகளை ஈர்த்து புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

இந்த 14 மாவட்டங்களில் முதல் கட்டமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், திருப்பூர், திருவண்ணாமலை ஆகிய 9 மாவட்டங்களில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் திருப்பூரில் 810 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க கலப்பு மின்சாரம் தயாரிப்பு திட்டத்திற்காக ரூ.6,300 கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் ராமேஸ்வரத்தில் 50 மெகாவாட் காற்றாலை மின்சார திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதில் 2,420 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வழங்குவதாக சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவித்து உள்ளது.

திருநெல்வேலியில் உள்ள கங்கை கொண்டான் சிப்காட்டில் பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனமான பிரிட்டானியா தனது ஆலையை விரிவுபடுத்துவதற்காக ரூ.250 கோடி மதிப்பீட்டில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் தொழில்துறை தளவாட பூங்கா அமைக்கும் திட்டத்தில் ரூ.750 கோடி முதலீட்டை முன்மொழிந்துள்ளது. இதன் மூலம் சுமார் 500 பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.

மேலும் சென்னை அருகே டேட்டர் சென்டர் திட்டத்தை அமைப்பதற்காக ரூ.750 கோடி முதலீடு செய்யப்படவுள்ளது. இதில் 550 பேர்களுக்கு வேலை கிடைக்கும். இதுதவிர சென்னை அருகே கார்பன் பைபர் தகடுகளை தயாரிப்பதற்கு ரூ.200 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. இதில் 250 பேருக்கு வேலைக் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மின் குப்பைகளை அகற்றுவதற்கும் மறுசுழற்சி செய்வதற்கும் ஒரு மின் கழிவு மேலாண்மை வசதியை அமைக்க ரூ.50 கோடி முதலீட்டில் சுமார் 750 பேர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் உலோகங்கள் சுத்திகரிப்பு திட்டம் ஒன்றும் நிறுவப்படுகிறது.

மேலும் சென்னை அருகே ஒரகடத்தில் காற்றாலைகளை தயாரிப்பதற்கான விரிவாக்க திட்டமும் மேற்கொள்ளப்பட உள்ளது. சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் சிப்காட் தொழில் பூங்காவில் டயர்கள் தயாரிப்பதற்கான விரிவாக்க திட்டத்தை நிறுவ அப்பல்லோ டயர்ஸ் முன்மொழிந்துள்ளது. அந்நிறுவனம் இந்த விரிவாக்க திட்டத்தில் ரூ.5050 கோடி முதலீடு செய்ய உள்ளது. ரூ.109 கோடி முதலீட்டில் தென் கொரியாவின் ஹுண்டாய் வியா நிறுவனம் சென்னை அருகே ஸ்ரீபெரம்புதூரில் தனது வசதியை விரிவுபடுத்த உள்ளது. அமெரிக்கா, ஸ்பெயின், ஹாங்காங், சிங்கப்பூர், தென் கொரியா எனப் பல நாடுகள் சார்பில் இந்தத் திட்டங்கள் செயல்பட இருக்கின்றன இவ்வாறு தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

More News

டிரைவரே இல்லாமல் சாலையில் ஒடிய கார்… மண்டையைப் பிய்த்துக் கொண்ட பயணிகள்!!! நடந்தது என்ன???

நமது தமிழகத்தின் எங்கோ ஒரு நெடுஞ்சாலையில் பழைய மாடல் கார் ஒன்று, டிரைவரே இல்லாமல் ஓடும் வீடியோ தற்போது இணையத்தில் கடும் வைரலாகி இருக்கிறது

ஒரு வருஷமா கழிவறைக்குள் அடைக்கப்பட்ட பெண்… கணவனின் வெறிச்செயல்!!!

அரியானா மாநிலம் பானிபட் மாவட்டம் ரிஷ்பூர் கிராமத்தில் ஒரு பெண் தனது கணவரால் ஒரு வருடத்திற்கும் மேலாக கழிவறைக்குள் அடைத்து வைக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது

ரூ.6.50 லட்சம் சொத்து வரி: ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு விதிக்கப்பட்டிருந்த சொத்து வரியை குறைக்க வேண்டும் என நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்

எவன் அவன்? அர்ச்சனாவின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுரேஷ் சக்கரவர்த்தியுடன் மோதாத போட்டியாளர் யாருமே இல்லை என்ற நிலையில் இன்று காலை பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஆர்ஜே அர்ச்சனா,

மூன்றே மணி நேரத்தில் விண்வெளி பயணம்… விண்வெளித் துறையில் புதிய சாதனை!!

ரஷ்யா விண்கலம் ஒன்று நேற்று பூமியில் இருந்து சர்வதேச விண்வெளி மையத்திற்கு வெறுமனே 3 மணி நேரத்தில் பயணித்து புதிய சாதனையைப் படைத்து இருக்கிறது