முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளம்: பொதுமக்கள் நேரடியாக புகாரளிக்க வசதி!

  • IndiaGlitz, [Wednesday,June 09 2021]

தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளதை அடுத்து பொதுமக்கள் நேரடியாக புகார் அளிக்கும் வசதி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களிடம் கோவிட் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து புகார் அளிப்பதற்காக முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையத்தளம் ஒன்று புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் மூலம் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களிடம் பொதுமக்கள் நேரடியாக புகார் அளிக்கலாம்

cmcell.tn.gov.in என்ற இந்த இணையதளம் மூலம் பொதுமக்கள் எப்பொழுது வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம் என்றும் இந்த புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு என்னவிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து விபரங்களும் இதில் பதிவு செய்யப்படும் என்றும் இதனை அடுத்து புகார் அளித்தவர்கள் தாங்கள் கொடுத்த புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் இந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

தற்போதைய பெருந்தொற்று காலத்தில் கோவிட் உள்ளிட்ட எந்த பிரச்சனையாக இருந்தாலும் வீட்டில் இருந்து கொண்டே இந்த இணையதளத்தின் மூலம் புகார்களை பதிவு செய்தால் அந்த புகார்களுக்கு தீர்வு அளிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More News

நர்ஸ்-ன் கவனக்குறைவு....! பச்சிளங்குழந்தையின் விரல் போன பரிதாபம்...!

செவிலியர் ஒருவரின் கவனக்குறைவால், பிறந்து 14 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் விரல் பரிதாபமாக பறிபோயுள்ளது.

கொரோனா தொடர்பான பொருட்களுக்கு விலை நிர்ணயம்....! தமிழக அரசு அறிவிப்பு....!

கொரோனா சார்ந்த பொருட்களான முகக்கவசம் கிருமிநாசினி உள்ளிட்ட பொருட்களுக்கு, தமிழக அரசு விலையை நிர்ணயம் செய்துள்ளது.

'சீயான் 60' படம் குறித்த சூப்பர் அப்டேட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜகமே தந்திரம்' திரைப்படம் வரும் 18ம் தேதி ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் இயக்கி வரும் மற்றொரு திரைப்படமான 'சியான் 60 படம்

ஊரடங்கு நேரத்தில் சன்னிலியோன் செய்த சேவை!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்துவரும் நிலையில் ஏராளமான ஏழை எளிய மக்கள் வேலை இன்றி,

இந்திய அளவில் ட்ரெண்டாகும் விலங்குகளின் டுவிட்டுகள்...! குறும்பு நெட்டிசன்களின் செயல்....!

டுவிட்டரில் உயிரினங்களின் பெயர்களை வைத்து, நெட்டிசன்கள் செய்த சேட்டையான செயல் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.