பிரபல இயக்குனரின் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த முதல்வர் முக ஸ்டாலின்: என்ன காரணம்?

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் திடீரென இயக்குனர் செல்வராகவன் வீட்டிற்கு சென்று உள்ள நிலையில் இது குறித்த புகைப்படத்தை செல்வராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் திரையுலகின் வித்தியாசமான இயக்குனர் செல்வராகவன் என்பதும் அவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்பது தெரிந்ததே. இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ’நானே வருவேன்’ என்ற திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் திடீரென செல்வராகவன் வீட்டிற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சென்று உள்ளார். அவர் செல்வராகவனின் குடும்பத்தினருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்

இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள செல்வராகவன் முதலமைச்சர் அவர்கள் தனது வீட்டிற்கு வருகை தந்தது மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்றும் அவருடனான உரையாடல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்றும் தெரிவித்துள்ளார். செல்வராகவன் பகிர்ந்துள்ள புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.