'மாமன்னன்' படம் பார்த்த தமிழக முதல்வர் ஸ்டாலின்.. மாரி செல்வராஜை என்ன செய்தார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான ’மாமன்னன்’ என்ற திரைப்படம் இன்று திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. ஏற்கனவே இந்த படத்தை சில பிரபலங்கள் பார்த்து கொண்டாடிய நிலையில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இந்த படத்தை பார்த்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ’மாமன்னன்’ படத்தை பார்த்து கட்டி தழுவி கொண்டாடிய மாண்புமிகு முதல்வர் முக ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு எங்கள் பெரும் மரியாதை கலந்த நன்றியையும் பிரியத்தையும் சமர்ப்பிக்கிறோம்’ என்று பதிவு செய்துள்ளார். மேலும் மாரி செல்வராஜின் தோளில் கை போட்டு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்த புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார்.
ஏற்கனவே உலகநாயகன் கமல்ஹாசன், தனுஷ் உள்ளிட்டோர் ’மாமன்னன்’ படத்தை பார்த்து தங்களது பாராட்டுகளை தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘மானுடர் அனைவரும் சமம் என்பது என் வாழ்க்கை முறை, என் கருத்துக்கு வலிமை சேர்க்கும் மாமன்னனுக்கு வாழ்த்துக்கள்’ என்று கமல்ஹாசன் ’மாமன்னன்’ படம் பார்த்த பிறகு தெரிவித்துள்ளார்.
அதேபோல் தனுஷ் ’மாமன்னன்’ திரைப்படம் ஒரு நல்ல எமோஷனல் திரைப்படம் என்றும் மாரி செல்வராஜுக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் வடிவேலு உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மிக அபாரமாக நடித்துள்ளதாகவும், அதே போல் பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பும் அபாரம் என்றும் இண்டர்வெலில் தியேட்டரே தெறிக்க போகிறது என்றும் தெரிவித்திருந்தார்.
மாமன்னனை பார்த்து கட்டித்தழுவி கொண்டாடிய மாண்புமிகு முதல்வர் திரு . @mkstalin ஐயா அவர்களுக்கு எங்கள் பெரும் மரியாதை கலந்த நன்றியையும் ப்ரியத்தையும் சமர்பிக்கிறோம் ❤️❤️❤️ @Udhaystalin @arrahman @KeerthyOfficial @RedGiantMovies_ #MAAMANNAN 🤴 pic.twitter.com/1snE2uBQeF
— Mari Selvaraj (@mari_selvaraj) June 29, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com