முதல்வர் உடல்நிலை குறித்த இனிய செய்தி

  • IndiaGlitz, [Saturday,November 19 2016]

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லொ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்டு, எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் சிங்கப்பூர் மருத்துவர்கள் ஆகியோர் சிகிச்சை செய்து வந்தனர்.
இந்நிலையில் முதல்வரின் உடல்நிலை தற்போது நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், அவர் செயற்கை சுவாசம் இன்றி இயற்கையாக சுவாசிப்பதாகவும் அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி உறுதி செய்துள்ளார்.
மேலும் கடந்த சில நாட்களாகவே அவர் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து நார்மல் வார்டுக்கு மாற்றப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில் இன்று மாலை முதல்வர் நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டதாக செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் முதல்வர் விரைவில் வீடு திரும்பி தனது வழக்கமான பணிகளை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் அதிமுக தொண்டர்களுக்கு மட்டுமின்றி தமிழக மக்கள் அனைவருக்குமான இனிய செய்தி என்பதில் சந்தேகம் இல்லை.

More News

இது 2000 ரூபாய் நோட்டா? ஜீரோ ரூபாய் நோட்டா? அதிர்ச்சி தகவல்

பிரதமரால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை கடந்த பத்து நாட்களாக பொதுமக்கள் கால்கடுக்க வரிசையில் நின்று மாற்றி வருகின்றனர்.

கமல் பிரிவிற்கு பின் கவுதமி வெளியிட்ட உண்மை

உலக நாயகன் கமல்ஹாசனுடன் வாழ்ந்த 13 வருட வாழ்க்கையில் இருந்து சமீபத்தில் பிரிந்த நடிகை கவுதமி, தனது பிரிவிற்கான நீண்ட விளக்கத்தையும் சமீபத்தில் அளித்தார்.

விஷாலின் வீட்டில் விரைவில் திருமணம்

நடிகர் சங்கத்திற்கு என சொந்தமாக கட்டிடம் கட்டியவுடன் தான் திருமணம் என்பதில் விஷால் உறுதியாக இருக்கும் நிலையில் விரைவில் விஷால் வீட்டில் ஒரு திருமணம் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

'விஜய் 61' படப்பிடிப்பு தொடங்குவது எப்போது? ரிலீஸ் எப்போது?

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பைரவா' படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது.

ஏன் ஒரு பணக்காரர் கூட வங்கியின் வரிசையில் நிற்கவில்லை? சில அதிர்ச்சி தகவல்

கருப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்பு சரியான நடவடிக்கை என்று கூறப்பட்டாலும், எந்த நோக்கத்திற்காக அவர் அறிவித்தாரோ, அந்த நோக்கம் நிறைவேறுமா? என்ற சந்தேகம் தற்போது பலருக்கு எழுந்துள்ளது.