எடப்பாடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த தமிழக முதல்வர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
7 ஆவது முறையாக எடப்பாடி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று எடப்பாடி தொகுதியில் உள்ள தாலுகா அலுவலகத்தில் சமர்ப்பித்தார். கொரோனா பரவல் காரணமாக வேட்புமனு தாக்கலின்போது 2 பேர் மட்டுமே உடன் இருக்கவேண்டும் என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டு இருக்கிறது.
அந்த விதிமுறைகளை பின்பற்றிய எடப்பாடி பழனிசாமி தன்னுடைய வேட்புமனுவை இன்று எடப்பாடி தொகுதியில் உள்ள தாலுகா அலுவலகத்தில் சமர்ப்பித்தார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், கடந்த 1989 ஆம் ஆண்டு எடப்பாடி தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பினை மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் வழங்கினார். தொடர்ந்து இத்தொகுதிக்காக பணியாற்றி வருகிறேன். மேலும் நாடு முழுவதும் கடன்கள் இருந்தாலும் வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றே வருகின்றன. அதிகமான ரேஷன் கடைகள், அங்கன்வாடி கட்டிடங்கள் திறந்துள்ளேன்.
அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்தியுள்ளேன். அடித்தட்டு மக்கள் அனைவரும் தேர்தல் அறிக்கையை வரவேற்றுள்ளனர். ஒட்டுமொத்த மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் தேர்தல் அறிக்கை. இத்தேர்தல் அறிக்கை மக்களிடம் எடுப்பட்டதா என்பது தேர்தல் முடிவுக்குப்பிறகு தெரியும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments