எடப்பாடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த தமிழக முதல்வர்!

  • IndiaGlitz, [Monday,March 15 2021]

7 ஆவது முறையாக எடப்பாடி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று எடப்பாடி தொகுதியில் உள்ள தாலுகா அலுவலகத்தில் சமர்ப்பித்தார். கொரோனா பரவல் காரணமாக வேட்புமனு தாக்கலின்போது 2 பேர் மட்டுமே உடன் இருக்கவேண்டும் என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டு இருக்கிறது.

அந்த விதிமுறைகளை பின்பற்றிய எடப்பாடி பழனிசாமி தன்னுடைய வேட்புமனுவை இன்று எடப்பாடி தொகுதியில் உள்ள தாலுகா அலுவலகத்தில் சமர்ப்பித்தார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், கடந்த 1989 ஆம் ஆண்டு எடப்பாடி தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பினை மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் வழங்கினார். தொடர்ந்து இத்தொகுதிக்காக பணியாற்றி வருகிறேன். மேலும் நாடு முழுவதும் கடன்கள் இருந்தாலும் வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றே வருகின்றன. அதிகமான ரேஷன் கடைகள், அங்கன்வாடி கட்டிடங்கள் திறந்துள்ளேன்.

அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்தியுள்ளேன். அடித்தட்டு மக்கள் அனைவரும் தேர்தல் அறிக்கையை வரவேற்றுள்ளனர். ஒட்டுமொத்த மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் தேர்தல் அறிக்கை. இத்தேர்தல் அறிக்கை மக்களிடம் எடுப்பட்டதா என்பது தேர்தல் முடிவுக்குப்பிறகு தெரியும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

More News

அந்தோணிதாசன் குரலில் வைரலாகும் 'சுல்தான்' சிங்கிள் பாடல்!

'சுல்தான்' திரைப்படம் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றன 

சீதா கதாபாத்திரத்தில் ஆலியா பட்… பிறந்த நாளன்று வெளியான வைரல் புகைப்படம்!

“பாகுபலி“ இயக்குநர் ராஜமௌலி பிரம்மாண்ட பொருட்செலவில் மீண்டும் ஆர்ஆர்ஆர் எனும் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்.

கமல் விமானத்தில் பறக்கலாம், எல்லாம் பிக்பாஸில் வந்த பணம்: சீமான்

கமல் தாராளமாக விமானத்தில் பறக்கலாம் அவருக்கு பிக்பாஸில் வந்த பணம் இருக்கிறது ஆனால் என்னிடம் அந்த அளவிற்கு பணம் இல்லை என்று திருவொற்றியூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீமான்

திருமண புகைப்படத்தை வெளியிட்டார் பும்ரா: ரசிகர்கள் வாழ்த்து!

இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பணிபுரிந்து கொண்டிருக்கும் தொகுப்பாளினி சஞ்சனா கணேசனுக்கும் இன்று திருமணம் நடைபெற இருப்பதாக ஏற்கனவே வெளிவந்த செய்தியை

அதிமுகவின் அசத்தும் தேர்தல் அறிக்கை… ஒரே ஷாட்டில் மக்களை கவர்ந்த தமிழக முதல்வர்!

வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை அறிவித்தார்