11ஆம் தேதி மருத்துவர் குழு, 17ஆம் தேதி பிரதமர்: அடுத்தடுத்து ஆலோசனை செய்யும் முதல்வர்
- IndiaGlitz, [Saturday,June 13 2020]
தமிழகத்தில் குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசின் சுகாதாரத் துறையும் சென்னை மாநகராட்சியின் இணைந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் சென்னையில் கொரோனா நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது. நேற்று தமிழகத்தில் 1982 பேர்களுக்கு கொரோனா பாதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சென்னை மற்றும் தமிழகம் முழுவதிலும் கொரோனாவில் தாக்கத்தை கட்டுப்படுத்துவது எப்படி?, அடுத்த கட்டமாக எடுக்க வேண்டியது நடவடிக்கை என்ன? என்பது குறித்து மருத்துவர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆலோசனை செய்ய உள்ளார். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் மருத்துவக் குழுவுடன் ஆலோசித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வரும் திங்கட்கிழமை காலை 11 மணிக்கு மீண்டும் மருத்துவக் குழுவுடன் ஆலோசனை செய்ய உள்ளார்
மேலும் பிரதமர் மோடி அவர்கள் வரும் 16 மற்றும் 17 ஆம் தேதி தமிழகம் உள்பட அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தமிழக முதல்வருடன் ஜூன் 17ஆம் தேதி ஆலோசனை நடைபெற உள்ளது. காணொளியில் நடைபெற உள்ள இந்த ஆலோசனையில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் அதிரடியாக ஒரு சில நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் தற்போது மருத்துவர் குழு மற்றும் பிரதமருடன் தமிழக முதல்வர் ஆலோசனை செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது