தமிழக மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர்… முதல்வர் பழனிசாமி எடுத்த அதிரடி நடிவடிக்கையால் சாத்தியம்!!!

 

தமிழக மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டிருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். கொரோனா வைரஸ் பேரிடர் காலத்திலும் தமிழக மக்களுக்கு தேவையான பாதுகாப்பு மிக்க குடிநீரை வழங்கும் வகையில் பல்வேறு திட்ட நடவடிக்கைகள் அமல்படுத்தப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார்.

முன்னதாக கொரோனா பேரிடர் தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு சிறப்பான முன்னேற்பாடுகளை செய்திருந்தது. அந்த வகையில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை இந்திய அளவில் தமிழகத்தில்தான் அதிகமாக இருந்ததாகச் சுகாதாரத்துறை சார்பில் கூறப்பட்டது. தற்போது கொரோனா பேரிடர் காலத்திலும் தமிழக மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக பல நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கிவிட்டது. இதனால் குடிநீர் குறித்த அச்சம் மக்களிடம் பொதுவாகக் காணப்படுகிறது. அந்த அச்சத்தைப் போக்கும் வகையில் தமிழக மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்படும் எனத் தமிழக முதல்வர் தெரிவித்து உள்ளார். இதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து இருக்கிறது.

மழைக்காலங்களில் பொதுவாக நோய்க்கிருமிகள் குறித்த அச்சம் அதிகரித்து காணப்படும். அந்த வகையில் பாதுகாப்பான குடிநீரை வழங்கி நோக்கிருமிகள் குறித்த அச்சத்தை போக்க தமிழக அரசு பல முன்னேற்பாட்டு நடவடிக்கைகளைத் தொடங்கி இருக்கிறது. இதனால் தமிழகம் முழுவதும் சுத்தமான குடிநீர் விநியோகிக்கப்படும் என உத்தரவாதத்தையும் தமிழக முதல்வர் வெளியிட்டு இருக்கிறார்.