சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்படுகிறதா...! டெல்லி முதல்வர் கடிதம்....!

  • IndiaGlitz, [Wednesday,April 14 2021]

கொரோனா தீவிரமாகி வருவதால், சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளை தள்ளிவைக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சென்ற ஆண்டை காட்டிலும், நடப்பாண்டில் தினசரி கொரோனா பாதிப்பு பெருமளவில் அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் அதிகம் உள்ள மாநிலங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்பட்டுள்ளன. மேலும் ஒருசில மாநிலங்களில் படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சிபிஎஸ்இ தேர்வு சொன்னபடியே மே-4-இல் நடக்கும் எனக்கூறப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து மாணவர்கள் உயிருடன் விளையாடுவது நல்லதல்ல, நேரடி தேர்வுகளை ரத்து செய்து, ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய கல்வி அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,

டெல்லியில் நடக்கவிருக்கும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் 6 லட்சம் மாணவர்களும், 1 லட்சம் ஆசிரியர்களும் பங்கேற்க உள்ளதால், தொற்று பரவ அதிகம் வாய்ப்புள்ளது. மத்திய அரசு தேர்விற்கு பதிலாக வேறு மாற்று முறைகளை பரிசீலிக்க வேண்டும். கொரோனாவின் இரண்டாவது அலை ஆபத்தாக உள்ளதால், ஆன்லைன் முறை அல்லது உள் மதிப்பீட்டின் அடிப்படையில் மாணவர்களை இம்முறை தேர்ச்சி பெற வைக்க ஆலோசனை நடத்தலாம். டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில், சுமார் 13, 500 நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்வுகளை ரத்து செய்யவோ, ஆன்லைனில் நடத்தவோ சிபிஎஸ்இ தயாராக இல்லை. இத்தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில்,மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் மற்றும் சிபிஎஸ்இ அதிகாரிகள் இதுபற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 

More News

'குக் வித் கோமாளி' கிராண்ட் ஃபினாலே: ஷிவாங்கி பதிவு செய்த உருக்கமான டுவீட்

கடந்த சில மாதங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சி இன்றுடன் முடிவடைகிறது. இன்று மதியம் 2 மணிக்கு 5 மணி நேர நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது

'அந்நியன்' படத்தின் இந்தி ரீமேக்: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஷங்கர்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான 'அந்நியன்' திரைப்படம் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே

கும்பமேளா திருவிழாவில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்: காற்றில் பறக்கவிடப்பட்ட கொரோனா விதிமுறைகள்!

இந்துக்களின் புனித நிகழ்வுகளில் ஒன்றான கும்பமேளாவில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கங்கை நதியில் குளிப்பது உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதால் கொரோனா தொற்று

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் செந்திலின் வீடியோ வைரல்!

காமெடி நடிகர் செந்தில் சமீபத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

அதெலட்டிக் வீராங்கனை தனலட்சுமிக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த பரிசு

பிரபல அதெலடிக் வீராங்கனை தனலட்சுமிக்கு சிவகார்த்திகேயன் பரிசு கொடுத்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது