நிதியமைச்சர் ஜெயகுமார் தாக்கல் செய்த தமிழக பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்
Thursday, March 16, 2017 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் இன்று முதன்முதலாக தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் ஜெயகுமார் தற்போது சட்டசபையில் வாசித்து வருகிறார். முன்னதாக அவர் பட்ஜெட் அடங்கிய சூட்கேஸை ஜெயலலிதா சமாதியில் வைத்து அஞ்சலி செலுத்தினார்
நிதியமைச்சர் ஜெயகுமார் தாக்கல் செய்த பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
* சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூ.3,790 கோடி
* மீன்வளத்துறைக்கு ரூ.860 கோடி ஒதுக்கீடு.
* தொழிலாளர் நலத்துறைக்கு 1,010 கோடி
* மீனவர்களுக்கு ரூ. 83 கோடி செலவில் 5,000 வீடுகள்.
* மீன்பிடி தடைக்காலத்தில் ரூ.5,000 உதவித்தொகை.
* படகு, டீசல் அளவு 15,000 லிட்டரில் இருந்து 18,000 லிட்டராக உயர்வு.
* விதை உற்பத்தியை வலுப்படுத்த ரூ.50 கோடியில் திட்டம்.
* ஆவின் பால் பொருள்களை பிரபலப்படுத்த 200 புதிய பாலகங்கள்.
* நாட்டு மாடு இனப்பெருக்கத்துக்கு புதிய திட்டம்.
* வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு விட கூடுதலாக 500 மையங்கள் அமைக்கப்படும்.
* உழவர் உற்பத்திக் குழுவுக்கு ரூ.100 கோடி.
* கோழிப்பண்ணை வளர்ச்சிக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு
* 2 லட்சம் விவசாயிகள் பயன்படும் வகையில் உழவர் உற்பத்திக் குழு அமைக்கப்படும்.
* உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நலிந்தோர் நிவாரண உதவி ரு.20,000 ஆக உயர்வு.
* பயிர் காப்பீடு மானியத்திற்கு ரூ. 522 கோடி நிதி ஒதுக்கீடு
* பள்ளிக் கல்வித்துறைக்கு ரு.26,932 கோடி
* உயர்க் கல்வித்துறைக்கு ரூ. 3,680 கோடி
* பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கு ரூ.988 கோடி நிதி
* 2017-18-ல் 100 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை தயாரிக்க திட்டம்.
* அகதிகள் நலனுக்கு ரூ.116 கோடி.
* காவல்துறை வீட்டு வசதிக்கு ரூ.450 கோடி
* குறைந்த நீரில், நீடித்த நவீன கரும்பு சாகுபடிக்கு ஊக்குவிக்கப்படும்.
* பழங்குடியினர் துறைக்கு ரூ.265 கோடி
* நீதித்துறை மேம்பாட்டுக்கு ரூ.983 கோடி
* ஏழைக்குடும்பங்களுக்கு 3.5 லட்சம் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும்.
* 10,500 புதிய காவலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
* தீயணைப்புத்துறைக்கு ரூ.253 கோடி
* இளைஞர் நலன், விளையாட்டுத்துறைக்கு ரூ.165 கோடி.
* ஆதி திராவிடர் நலன்துறைக்கு ரூ.3,009 கோடி
* இ- சேவை மையங்கள் மூலம் 500 விதமான சேவைகள்
* மெட்ரோ ரயில் திட்டத்துக்கான 2-ம் கட்ட பணிக்கான திட்ட அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
* அவினாசி அத்திக்கடவு திட்டத்துக்கு மத்திய அரசின் அனுமதியை, மாநில அரசு எதிர்நோக்கியுள்ளது.
* சுகாதாரத்துறைக்கு ரூ.10, 158 கோடி
* சிறைத்துறைக்கு ரூ.282 கோடி
* காவல்துறைக்கு ரூ 6,483 கோடி
* உள்ளாட்சி தேர்தல் நடத்த ரூ.174 கோடி நிதி.
* மின்சாரம் எரிசக்தி துறைக்கு ரூ.16,998 கோடி
* கோவை, திருச்சி, மதுரையில் 1 லட்சம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி
* நகராட்சி நிர்வாகத்துறைக்கு ரூ. 13,996 கோடி
* தமிழ்வளர்ச்சிக்கு ரூ.48 கோடி ஒதுக்கீடு
* தமிழ்பல்கலைக்கழகத்துக்கு ரூ.6 கோடி ஒதுக்கீடு
* தொழில்துறைக்கு ரூ.2,088 கோடி ஒதுக்கீடு
* 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ. 1,000 கோடி
* கால்நடை பராமரிப்புக்கு ரூ. 1,161 கோடி
* தமிழக அரசின் மொத்த கடன் ரூ 3,14,166 கோடி
* உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியாக ரூ. 200 கோடி ஒதுக்கீடு.
* மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது
* ஊரகப்பகுதிகளில் 135 இடங்களில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
* ஐடி துறைக்கு ரூ.116 கோடி
* போக்குவரத்துறைக்கு ரூ.2,191 கோடி
* வணிகவரி மூலம் ரூ.77,234 கோடி வருவாய் கிடைக்கும்.
* நெடுஞ்சாலை துறைக்கு 10,067 கோடி ஒதுக்கீடு
* குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க ரூ.615 கோடி.
* அரசின் மொத்த செலவு ரூ. 1,75,351 கோடி.
* 2017-18-ல் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதமாக இருக்கும்
* ஜெயலலிதா அளித்துள்ள 164 வாக்குறுதிகளில் 60 வாக்குறுதிகள் நிறைவேற்றம்.
* கூட்டுறவுத்துறைக்கு ரூ.1,830.50 கோடி.
* மகப்பேறு உதவி ரூ.12,000 முதல் 18,000 ஆக உயர்வு
* கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.7,000 கோடி புதிய கடன் வழங்க நடவடிக்கை.
* மீன்வளத்துறைக்கு ரூ.768 கோடி
* மாநிலத்தின் வரி அல்லாத வருவாய் ரூ.12,318 கோடி.
* மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ. 99,590 கோடி.
* தமிழகத்தில் ரூ. 3, 14, 366 கோடி கடன்.
* தமிழகத்தில் ரூ. 41,977 கோடி நிதிப்பற்றாக்குறை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments