பாதுகாப்பு வழங்கும் போலீசுக்கே அச்சுறுத்தலா? எதிர்க்கட்சி குறித்து தமிழக முதல்வர் காட்டம்!
- IndiaGlitz, [Friday,March 26 2021]
தமிழகச் சட்டப் பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அனைத்துக் கட்சிகளும் தற்போது தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனித்து வரும் ஒரு உயர் அதிகாரிக்கே எதிர்க்கட்சி சார்பில் தொடர்ந்து அச்சுறுத்தல் நடப்பதாக விமர்சித்தார்.
மேலும் “அரசியலில் புதிதாக பங்கேற்று இருக்கும் திமுக இளைஞர் பிரிவு செயலாளர் டிஜிபி கேடர் அதிகாரிக்கு அச்சுறுத்தல் தொடருவதாக குற்றம் சாட்டிய அவர், டிஜிபி என்பது மாநிலத்தில் மிக உயர்ந்த போலீஸ் தரவரிசை மற்றும் உயர் அதிகாரத்தில் இருக்கும் ஒரு பதவி. அப்படி ஒரு பதவியில் இருப்பவருக்கே இங்கு அச்சுறுத்தல் நடக்கிறது. இந்நிலையில் ஒருவேளை எதிர்க்கட்சி தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சிக்கு வந்தால் எங்களை பாதுகாக்கும் போலீசாருக்கே பாதுகாப்பு தேவைப்படும்” என்று காட்டமாக விமர்சனம் செய்து இருந்தார்.
“வெற்றி நடைபோடும் தமிழகம்“ எனும் பெயரில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தற்போது தமிழகம் முழுவதும் சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் தனது ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை எடுத்துக் கூறிவரும் அவர் மதுரை பகுதியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மாநிலத்திலேயே உயர்தரத்துடன் எய்ம்ஸ் மருத்துவமனைக் கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் அதிமுக மேற்கொண்டது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.