தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம்: எந்தெந்த கிழமைகளில் என்னென்ன மெனு?

முன்னாள் முதல்வர்கள் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தையும் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தையும் தொடங்கி வைத்த நிலையில் தற்போதைய முதல்வர் முக ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்பதும், மதுரையிலுள்ள ஆதிமூலம் நகராட்சி பள்ளியில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மாணவர்களுடன் உணவு அருந்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து உரையாற்றிய முதல்வர் முக ஸ்டாலின், ‘காலை உணவு திட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்கும் திட்டம் என்றும் இந்த நாள் என் வாழ்நாளில் பொன்னாள் என்று சொல்லக்கூடிய நாளாக அமைந்துள்ளது என்றும் கூறினார். எவ்வளவுதான் நிதிச்சுமை என்றாலும் பசியோடு வரும் பிள்ளைகளுக்கு முதலில் உணவு வழங்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தோன்றியதுதான் இந்த திட்டம் என்றும் அவர் தெரிவித்தார்

இந்த நிலையில் திங்கள் முதல் வெள்ளி வரை அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தின்படி வழங்கப்படும் உணவு மெனு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவல் இதோ:

திங்கள்: அரிசி, ரவை, சேமியா, கோதுமை ரவை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் உப்புமா மற்றும் காய்கறி சாம்பார்,

செவ்வாய்: ரவை, சேமியா, சோளம், கோதுமை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் காய்கறி கிச்சடி

புதன்: வெண் பொங்கல் அல்லது ரவை பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார்

வியாழன்: அரிசி, ரவை, சேமியா, கோதுமை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் உப்புமா மற்றும் காய்கறி சாம்பார்

வெள்ளி: ரவை, சோளம், கோதுமை ரவை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் காய்கறி கிச்சடி மற்றும் ரவை கேசரி, சேமியா கேசரி

காலை 8.15 மணி முதல் 8.45 மணிவரை மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும்.

More News

தந்தை கார்த்திக் உடன் செம மோதல்.. கெளதம் கார்த்திக் வெளியிட்ட வீடியோ!

நவரச நாயகன் நடிகர் கார்த்திக்கின் மகனும் தமிழ் திரையுலகின் இளம் நடிகருமான கௌதம் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தந்தை கார்த்திக் உடன் மோதும் வீடியோவை வெளியிட்டுள்ள

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' படம் குறித்து சூர்யா என்ன சொன்னார் தெரியுமா?

சிம்பு நடித்த 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை இந்த படத்திற்கு கொடுத்து வருகின்றனர்.

கவுதம் மேனனின் அடுத்த திரைப்படத்தில் லிங்குசாமி நாயகன்?

 கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது என்றும் இந்த படம் நிச்சயம் சிம்பு மற்றும்

புத்தர் கோயிலை அடுத்து அஜித் விசிட் செய்த உலகப்புகழ் பெற்ற கோயில்: வைரல் புகைப்படங்கள்

அஜித் தற்போது லடாக் உள்ளிட்ட பகுதிகளில் பைக் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பதும் அப்போது அவர் சில கோயில்கள் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளையும் பார்வையிட்டு வருகிறார் என்பதும் தெரிந்தது.

பாத்-டேப் குளியல், நீர்ச்சருக்கு விளையாட்டு. மாலத்தீவை அணுஅணுவாக ரசிக்கும் பிரணிதா: வீடியோ வைரல்!

சமீபத்தில் குழந்தை பெற்ற நடிகை பிரணிதா தனது கணவருடன் மாலத்தீவு சென்றுள்ள நிலையில் மாலத்தீவில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.