பா.ஜ.க.வின் மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது: செந்தில் பாலாஜியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று இரவு அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து தற்போது சென்னை பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் சற்றுமுன் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்படும் வகையில் சித்ரவதை கொடுத்த அமலாக்கத்துறையின் நோக்கம் என்ன?
வழக்கிற்குத் தேவையான சட்ட நடைமுறைகளை மீறி மனிதநேயமற்ற முறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடந்து கொண்டிருப்பது தேவையா?
பா.ஜ.க.வின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது.
2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்படும் வகையில் சித்ரவதை கொடுத்த அமலாக்கத்துறையின் நோக்கம் என்ன?
— M.K.Stalin (@mkstalin) June 14, 2023
வழக்கிற்குத் தேவையான சட்ட நடைமுறைகளை மீறி மனிதநேயமற்ற முறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடந்து கொண்டிருப்பது… pic.twitter.com/D2EIs5vvWN
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout