'வானமே இல்லை': நடிகர் சூர்யாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பிரபல நடிகர் சூர்யாவுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் ’வானமே எல்லை’ என பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஆஸ்கார் விருது வழங்கும் குழுவில் உறுப்பினராக நடிகர் சூர்யா தேர்வு செய்யப்பட்டார் என்ற செய்தி இன்று வெளியாகி ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இதனை அடுத்து நடிகர் சூர்யாவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களும் நடிகர் சூர்யாவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, ஆஸ்கர் விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி சூர்யா அவர்களுக்கு எனது பாராட்டுகள்!
வானமே எல்லை!
தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, @TheAcademy விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி @Suriya_offl அவர்களுக்கு எனது பாராட்டுகள்!
— M.K.Stalin (@mkstalin) June 29, 2022
வானமே எல்லை!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments