தமிழக முதல்வரின் தாயார் காலமானார்: துணை முதல்வர் ஆறுதல்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவுசாயம்மாள் என்பவர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 93 

கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் இருந்த முதல்வரின் தாயார் சிகிச்சையின் பலனின்றி இன்று காலை காலமானார். தாயாரின் மறைவு குறித்து செய்தி அறிந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து விட்டு தனது தாயாருக்கு அஞ்சலி செலுத்தினார். முதல்வரின் தாயார் மறைவை அடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாயார் மறைவை அடுத்து துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் நேரில் ஆறுதல் கூற சேலம் செல்கிறார். முன்னதாக அவர் தனது டுவிட்டரில் ’மாண்புமிகு முதல்வர் அவர்களின் அன்புத்தாயார் திருமதி.தவுசாயம்மாள் அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன். தாயாரது பிரிவால் வாடும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று பதிவு செய்துள்ளார்.

மேலும் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சியின் பிரமுகர்கள் தமிழக முதல்வருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

More News

விஜய்சேதுபதி இயக்குனரின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு!

விஜய் சேதுபதி நடித்த 'கருப்பன்' என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பன்னீர்செல்வம் ஏற்கனவே 'ரேணிகுண்டா' என்ற வெற்றி படத்தை இயக்கி உள்ளார் என்பது தெரிந்ததே 

நீங்கள்லாம்... மக்களுக்கு என்னத்த பண்ண போறீங்க? 'மாநாடு' தயாரிப்பாளர் ஆவேசம்!

சினிமா ஆரம்பித்த காலத்தில் இருந்தே சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி,

தனுஷ் நாயகியின் படத்தை ரீமேக் செய்யும் போனிகபூர்: பரபரப்பு தகவல் 

இந்தியில் சூப்பர் ஹிட் ஆன 'பிங்க்' என்ற படத்தின் ரீமேக் படமான 'நேர்கொண்ட பார்வை' என்ற படத்தை தயாரித்த போனி கபூர் தற்போது அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கி வரும் 'வலிமை' என்ற படத்தை தயாரித்து

காஜல் அகர்வால் திருமணத்தில் திடீர் மாற்றம்!

பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கௌதம் என்பவருக்கும் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி திருமணம் என அதிகாரபூர்வமாக காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்

4 பெண்கள் உட்பட 11 தனிநபர்களுக்கு… 2020 நோபல் விருதுகள் …

2020 ஆம் ஆண்டிற்கான நோபல் விருதுகள் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது.