மக்கள் குறைகளை விரைந்து கேட்கவும்… துரிதமாக நடவடிக்கை எடுக்கவும்… தமிழக முதல்வரின் புதியதிட்டம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
மக்களின் பிரச்சனைகளை உடனடியாக அறிந்து அவற்றை தீர்த்து வைக்கும் நோக்கில் புதிய திட்டம் ஒன்றை தமிழக முதல்வர் அமல்படுத்தி இருக்கிறார். இதற்காக முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்தவும் அவர் முனைப்பு காட்டிவருகிறார்.
தமிழக மக்கள் தங்களது சிக்கல்களையும் குறைகளையும் குறிப்பிடுவதற்கு ஏற்ற வகையில் துறைவாரியான மக்கள் குறைத்தீர்ப்பு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. அதைத்தவிர இணையத்தள வாயிலாகவும் இந்தக் குறைத்தீர்ப்பு செயலிகள் தமிழகம் முழுவதும் இயங்கி வருகின்றன. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் திங்கள் தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டங்களில் கலந்து கொள்ள முடியாதவர்கள் தனிப்பட்ட முறையிலான மாதாந்திர மனுநீதி நாள், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் குறைதீர்க்கும் நாள், அம்மா திட்டக் குறைதீர்க்கும் நாள், ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் போன்றவையும் மாநில அளவில் முதலமைச்சரின் தனிப்பிரிவு அம்மா அழைப்பு மையம் போன்ற அமைப்புகளிலும் மனுக்கள் பெறப்பட்டு அவற்றை தீர்த்து வைப்பதற்கு ஏற்ற நடைமுறைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இத்தனை கூட்டங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் தற்போது முதலமைச்சரின் உதவி மையம் என்ற பெயரில் தமிழக முதல்வர் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தி இருக்கிறார். இதன் மூலம் பொதுமக்களின் குறைகளை உடனுக்கு உடன் பதிவு செய்து அவற்றிற்குத் தீர்வுகாண இந்த மையம் உதவியாக இருக்கும் எனவும் நம்பப்படுகிறது.
இந்த மையம் வழியாக வேலைவாய்ப்பு தொடர்பான கோரிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு தேவையான இடங்களில் திறன் பயிற்சிகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக தகவல் தொழில்நுட்பத் துறையின் மூலம் ரூ.12.78 கோடி ரூபாய் செலவில் புதிய திட்டம் ஒன்றையும் தமிழக அரசு தொடங்கவிருக்கிறது.
இந்நிலையில் புதிதாக உருவாக்கப்படவுள்ள முதலமைச்சரின் உதவி மையம் முதலில் 100 இருக்கைகள் கொண்ட உதவி மையமாக செயல்படும் என்றும் பின்னர் தேவைக்கேற்ப விரிவாக்கம் செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மக்கள் தங்களது அரசுத்துறைகள் தொடர்பான குறைகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என்றும் இந்தத் தகவல்கள் மூலம் முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மைத் திட்டம் மூலம் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு விரைந்து தீர்வுகாண வழிவகை செய்யப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
இதுவரை மாவட்டம் வாரியாக நடைபெற்று வந்த குறைதீர்ப்பு கூட்டங்கள் புதிய திட்ட நடைமுறையினால் மாநில அளவில் மொத்தமாக ஒருங்கிணைக்கப்படும். இந்த நடைமுறை வாயிலாக மக்களின் கருத்துக் கணிப்புகளை உடனடியாகத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப தமிழக அரசு செயல்பட உதவியாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout