தமிழக பட்ஜெட் மொத்த வருவாய், செலவு எவ்வளவு தெரியுமா?
- IndiaGlitz, [Thursday,March 15 2018]
தமிழக நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சற்றுமுன் தமிழக சட்டமன்றத்தில் 2018-2019ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் தற்போது பட்ஜெட் உரையை நிகழ்த்தி வருகிறார்.
இந்த ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டில் மொத்த வருவாய் ரூ.1.81 லட்சம் கோடி என்றும், செலவு ரூ.2.04 லட்சம் கோடி என்றும் பற்றாக்குறை ரூ.23 ஆயிரத்து 176 கோடி என்றும் நிதியமைச்சர் ஓபிஎஸ் அவர்கள் அறிவித்துள்ளார்.
மேலும் இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
ரூ1,43,962 கோடி கடன் பெற தமிழக அரசுதிட்டம்
2018-19ல் அரசின் வருவாய் ரூ1.76 லட்சம் கோடியாக இருக்கும்
தமிழகத்தின் பொருளாதாரம் 9% ஆக உயரும்
தமிழகத்தின் வருவாய் ரூ1.76 லட்சம் கோடி
தமிழக அரசின் செலவு ரூ2.04 லட்சம் கோடி
மலை சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ75 கோடி
நகர்ப்புற மேம்பாட்டுக்கு ரூ300 கோடி ஒதுக்கீடு
வடசென்னைக்கான வெள்ள தடுப்பு மேலாண்மைக்கு ரூ.3,243 கோடியில் திட்டம் தயாரிப்பு
மேலும் தமிழக பட்ஜெட் குறித்த தகவல் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இதே இடத்தில் காத்திருக்கவும்.