பூணூலை குறைசொல்ல கமலுக்கு தகுதி இருக்கிறதா? பிராமணர் சங்கம் கேள்வி

  • IndiaGlitz, [Friday,July 27 2018]

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் டுவிட்டரில் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகர் கமல்ஹாசனிடம், 'நீங்கள் படித்த நூலில் உங்களை மிகவும் பாதிப்பை உண்டாக்கிய நூல் எது? என்ற கேள்வியை எழுப்பினார். இந்த கேள்விக்கு பதிலளித்த கமல், 'நான் தவிர்த்த நூல் ஒன்று இருக்கிறது, அது என்னை மிகவும் பாதித்த நூல், “பூணூல் “ அதனாலேயே அதை தவிர்த்தேன்' என்று கூறினார். ரசிகரின் கேள்விக்கும் கமலின் இந்த பதிலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே என்ற கருத்து பரவலாக இருந்தது.

இந்த நிலையில் பூணூல் குறித்து கமல்ஹாசன் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. பூணூல் குறித்து கீழ்த்தரமாக விமர்சனம் செய்த பிராமண குல துரோகி நடிகர் கமல்ஹாசனை வன்மையாக கண்டிக்கின்றோம் என்று கூறிய பிராமணர் சங்கம், பிராமண மக்களின் புனித அடையாள சின்னத்தை கீழ்த்தரமாக விமர்சித்தது கமலின் வக்ர புத்தியை காட்டுகிறது என்றும், பூணூலை குறைசொல்ல கமலுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று நடிகர் கமலுக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

பிராமணர்கள் சங்கத்தின் இந்த கண்டனத்திற்கு கமல்ஹாசன் என்ன பதில் சொல்ல போகின்றார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.