கேரளா மட்டுமின்றி அனைத்து மாநில எல்லைகளும் மூடல்: தமிழக அரசு அதிரடி

கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் இருக்க வெளிநாட்டில் இருந்து வரும் விமானங்களை தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் இருக்க வெளிமாநிலங்களில் இருந்து வரும் அனைத்து வகை வாகனங்களுக்கும் தடை விதித்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் கேரளா உள்பட தமிழகத்தின் அனைத்து எல்லைகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கேரளா, கர்நாடகா மற்றும்‌ ஆந்திரப்‌ பிரதேச மாநில எல்லைகளை இணைக்கும்‌ சாலைகள்‌ கீழ்க்குறிப்பிட்டுள்ள வாகனப்‌ போக்குவரத்து தவிர இதர போக்குவரத்திற்காக நாளை முதல்‌ 31.3.2020 வரை மூடப்படுகிறது. இந்த சாலைகளில்‌, கீழ்க்கண்ட வாகனங்கள்‌ மட்டும்‌ அனுமதிக்கப்படும்‌:-

1. அத்தியாவசியப்‌ பொருட்களான பால்‌, பெட்ரோல்‌, டீசல்‌, காய்கறிகள்‌, மருந்துகள்‌, ஆம்புலன்ஸ்‌, கேஸ்‌ சிலிண்டர்கள்‌ ஏற்றிவரும்‌ வாகனங்கள்‌.

2. இதர சரக்கு வாகனங்கள்‌.

3. தவிர்க்க இயலாத காரணங்களான இறப்பு போன்ற காரணங்களுக்காக பயணிக்கும்‌ பயணிகளின்‌ இலகுரக வாகனங்கள்‌.

4. பொது மக்களின்‌ அத்தியாவசிய நகர்வுக்கு மட்டும்‌ குறைந்த அளவில்‌ இயக்கப்படும்‌ அரசு பேருந்துகள்‌. எனினும்‌, இந்த வாகனங்களில்‌ வரும்‌ நபர்கள்‌ அனைவரும்‌ நோய்தடுப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்‌. வாகனங்களும்‌ நோய்தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும்‌. நாட்டின்‌ நலன்கருதி பொதுமக்கள்‌ அனைவரும்‌ ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More News

ஒரு மில்லியன் மீல்ஸ் நன்கொடை கொடுத்த பிரபல ஜோடி!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பீதி இருப்பதால் அனைத்து மக்களும் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். கொரோனா வைரஸ்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை எ

கொரோனா வைரஸ் குடும்பம்!!! வகைகள், பாதிப்புகள் பற்றி தொகுப்பு!!!

கொரோனா என்ற வைரஸ் குடும்பத்தில் பல வகைகள் உண்டு. மனிதர்களை தாக்கும் வைரஸ், பறவைகளைத் தாக்கும் வைரஸ்,

கொரோனா எதிரொலி: மாஸ்க் வழங்கி மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்!

எப்பொழுதெல்லாம் இயற்கை பேரிடர் நேரிடுகிறதோ, அப்பொழுதெல்லாம் தளபதி விஜய்யின் ரசிகர்கள் முதல் ஆளாக வந்து சமூக சேவை செய்து வருவார்கள் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம் 

5 கிலோ சிக்கன் ரூ.100: அப்படியும் வாங்க ஆளில்லை

கோழிக்கறி மூலம் தான் கொரோனா பரவுவதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவியதால் பொதுமக்கள் அச்சத்தின் காரணமாக கோழிக்கறி வாங்குவதையே நிறுத்திவிட்டனர்.

எல்லோரும் 'படையப்பா' நீலாம்பரி போல மாறுங்கள்: வைரலாகும் மீம்ஸ்

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க அனைவரும் 'படையப்பா' நீலாம்பரி போல் மாறுங்கள் என சமூக வலைத்தளத்தில் ஒரு மீம்ஸ் வைரலாகி வருகிறது