கமல், ரஜினியை அடுத்து ரூ.2 லட்சம் பொன்னம்பலத்திற்கு கொடுத்து உதவிய பிரபலம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல வில்லன் மற்றும் குணசித்திர நடிகரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான பொன்னம்பலம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக் கோளாறு காரணமாக சென்னை மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார் என்பது தெரிந்ததே
நடிகர் பொன்னம்பலத்திற்கு சிறுநீரக கோளாறு இருப்பதாகவும் இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்ததால் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் பொன்னம்பலம் சிகிச்சை செலவு முழுவதையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஏற்றுக் கொண்டார். அதேபோல் பொன்னம்பலத்தின் இரண்டு குழந்தைகளின் படிப்புச் செலவுகளை உலகநாயகன் கமலஹாசன் ஏற்றுக்கொண்டார் என்று செய்திகள் வெளியானது
இந்த நிலையில் தற்போது தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் பொன்னம்பலம் அவர்களை நேரில் சந்தித்து தனது கட்சியின் சார்பில் ரூபாய் இரண்டு லட்சம் உதவித் தொகை செய்துள்ளார். இதற்கு பொன்னம்பலம் மற்றும் அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பொன்னம்பலம் பாஜகவில் இணைந்தார் என்பது தெரிந்ததே
Tamil Nadu BJP State President @Murugan_TNBJP ji has extended the support of Rs. 2,00,000 to actor/ BJP member Ponambalam ji during his tough time. Thank you @BJP4TamilNadu @CTR_Nirmalkumar pic.twitter.com/IN1lBxsmU3
— Gayathri Raguramm (@gayathriraguram) July 12, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments