தமிழக பாஜக பொதுச்செயலாளருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி!!!

  • IndiaGlitz, [Tuesday,September 29 2020]

 

தமிழக பாஜக பொதுச்செயலாளர் கே.டி.ராகவனுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதைப்போலவே நேற்று இந்து முன்னணி தலைவர் ராமகோபாலனுக்கு கொரோனா உறுதிச் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 94 வயதான அவர் நேற்று முன்தினம் மூச்சுத்திணறல் காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதிச்செய்யப் பட்டதாகவும் அதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் கட்சி தலைவர்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், பிரமுகர்கள் எனப் பலரும் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் பாஜகவின் தமிழகப் பொதுச் செயலாளருக்கும் இந்து முன்னணி தலைவர் ராமகோபாலனுக்குக் கொரோனா உறுதியாகி இருக்கிறது. தற்போது அவர்களுக்கு தீவிரச் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.