தமிழ் நடிகை மீது தமிழக பாஜக பதிவு செய்த வழக்கு
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடித்த 'குத்து', தனுஷ் நடித்த 'பொல்லாதவன் உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா. இவர் சமீபத்தில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பிரதமர் மோடியை 'திருடர்' என விமர்சனம் செய்தார். இதற்காக இவர் மீது உபி மாநிலத்தை வழக்கறிஞர் ஒருவர் தேசத்துரோக வழக்கை பதிவு செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில் நடிகை ரம்யா மீது தமிழக பாஜக, கோவை சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். பிரதமர் மீது அவதூறாக நடிகை ரம்யா கருத்துக்களை பதிவு செய்து வருவதாகவும், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாஜகவினர் புகார் மனு கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் காவல்துறை இந்த புகார் மீதும் நடவடிக்கை எடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com