முழு அடைப்பு போராட்டம் மக்களுக்கு மட்டும்தானா?
Send us your feedback to audioarticles@vaarta.com
விவசாயிகளுக்காக திமுக தலைமையில் அரசியல் கட்சிகள் நடத்திய இன்றைய முழு அடைப்பு போராட்டம் சற்று முன்னர் முடிவுக்கு வந்தது. இந்த போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சற்று முன்னர் அறிவித்துள்ளார்.
விவசாயிகளுக்காக நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கடைகள் மட்டுமே பெரும்பாலும் அடைக்கப்பட்டிருந்தது. மற்றபடி சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் போக்குவரத்து எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை. பொதுமக்கள் வழக்கம்போல் பணிக்கு சென்று வந்ததால் ஸ்டாலின் கூறியது எந்த அளவுக்கு உண்மை என்பதை தீர்மானிக்கும் பொருப்பை மக்களிடமே விட்டுவிடுவோம்
இன்று காலை முதல் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தாலும் ஒருசில கடைகள் திறந்திருந்தன. ஆனால் திமுகவினர் அந்த கடைகளையும் அடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதால் அந்த கடைகளும் அடைக்கப்பட்டன. ஆனால் திமுக தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமானவரும் தூத்துக்குடி மாவட்டத்தின் திமுக பெரும்புள்ளியுமான ஒருவர் தனது மகளின் பெயரில் நடத்தி வரும் உணவு விடுதி மற்றும் ரெஸ்டாரெண்ட் மட்டும் மூடவில்லை. மற்ற கடைகளை அடைக்க வலியுறுத்திய திமுகவினர்கள் இந்த இரண்டையும் கண்டு கொள்ளவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே முழு அடைப்பு போராட்டம் என்பது மக்களுக்கு மட்டும்தானா? அரசியல் கட்சிகளின் நிறுவனங்கள் எப்போதும் போல் கல்லா கட்டுவது நியாயம்தானா? என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments