நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த டிராபிக் ராமசாமி வழக்கில் முக்கிய உத்தரவு
- IndiaGlitz, [Thursday,February 23 2017]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 18ஆம் தேதி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். இந்த வாக்கெடுப்பு ரகசிய முறையில் நடைபெற வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஓபிஎஸ் அணியினர் சபாநாயகரிடம் வலியுறுத்தினர்.
ஆனால் சபாநாயகர் இதற்கு அனுமதிக்காததால் சட்டப்பேரவையில் பெரும் அமளி ஏற்பட்டது. இறுதியில் திமுக உறுப்பினர்களை வெளியேற்றிவிட்ட பின்னர் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பழனிச்சாமி அரசுக்கு 122 வாக்குகள் கிடைத்ததால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதை ரத்து செய்து, ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கோரி டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது இவ்வழக்கை சென்னை ஐகோர்ட் வரும் பிப்ரவரி 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கும் அதே பிப்ரவரி 27ஆம் தேதிதான் விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.