கொரோனா வைரஸ் எதிரொலி: தயாரிப்பாளர் சங்கம் முக்கிய அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
சீனா, இத்தாலி, ஸ்பெயின் அமெரிக்கா உள்பட உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மனித உயிர்களை பலி வாங்கி கொண்டு வரும் நிலையில் உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸுக்கு எதிரான தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. திரையரங்குகள் மால்கள் கடைகள் ஆகியவை மூடப்பட்டு வருவதாகவும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்தியாவில் சில மாநிலங்களில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டும், திரையரங்குகள் மால்கள் மூடப்பட்டும் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்திலும் கேரள மாநில எல்லையில் உள்ள திரையரங்குகளை மூட தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டது என்பதும் எல்கேஜி யுகேஜி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழ்த் திரையுலகிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வரும் வாரங்களில் புதிய திரைப்படங்கள் வெளியாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி விஜய்யின் ’மாஸ்டர்’ சூர்யாவின் ’சூரரைப்போற்று’ போன்ற படங்கள் திட்டமிடப்பட்ட ரிலீஸ் தேதியில் வெளியாக வாய்ப்பு இல்லை என்றும் இந்த படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்ட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கில்டு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி மார்ச் 31-ஆம் தேதி வரை தமிழ் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஜினியின் ’அண்ணாத்த’, சிம்புவின் ’மாநாடு’ அஜித்தின் ’வலிமை’ உள்பட பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout