தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் திரைப்படங்கள்: விஜய்சேதுபதிக்கும் விருது

67 வது தேசிய விருது சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு பல தேசிய விருதுகளை தமிழ் திரைப்படங்கள் அள்ளியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

குறிப்பாக ’அசுரன்’ திரைப்படத்தில் நடித்த தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது என்பதையும் அந்த படத்தை இயக்கிய வெற்றிமாறன் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது கிடைத்தது என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி ’சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. மேலும் ’அசுரன்’ திரைப்படம் சிறந்த தமிழ் படம் என்ற விருதையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அதுமட்டுமின்றி அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தில் சிறப்பாக இசையமைத்த டி.இமான் அவர்களுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைத்துள்ளது. மேலும் பார்த்திபனின் ’ஒத்த செருப்பு’ படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் 2019ஆம் ஆண்டுக்கான தேசிய விருதில் தமிழ் திரைப்படங்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளது தமிழ் திரையுலகிற்கே பெருமை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கொரோனாவால் தள்ளிப்போகிறதா 'சுல்தான்' ரிலீஸ்: எஸ்.ஆர்.பிரபு விளக்கம்!

கார்த்தி நடித்த 'சுல்தான்' திரைப்படம் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இரண்டு தேசிய விருதுகளை பெற்றது 'அசுரன்': படக்குழுவினர் மகிழ்ச்சி

67வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட இருப்பதாக ஏற்கனவே தகவல் வந்த நிலையில் சற்று முன் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது

ஊழலைப் பற்றி நடிகர் கமல் ஏன் பேசுகிறார்?  விமர்சனத்தால் தாக்கும் அதிர்ச்சி வீடியோ!

வரும் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி தமிழகத்தில் 5 முனை போட்டி நிலவுகிறது. இதில் “வெற்றிநடை போடும் தமிழகம்“ என அதிமுகவும்,

தமிழ் இளம் நடிகையின் ஸ்டன்னிங் போட்டோ ஷுட்… வைரல் புகைப்படம்!

தெலுங்கு சினிமாவில் பப்ளி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ராஷி கண்ணா. முன்னணி நடிகையாக இருந்தாலும்

வெள்ளைப் பனியில் மின்னும் தமிழ் முன்னணி நடிகை… வைரல் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் பாடகி, நடிகை எனப் பன்முக அடையாளங்களைக் கொண்டவர் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா. “பச்சைக் கிளி முத்துச்சரம்“