பெப்சி தொழிலாளர்கள் குறித்து அதிரடி முடிவெடுத்த திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பெப்சி தொழிலாளர்களை பயன்படுத்துவது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் பெப்சி தொழிலாளர்களை மட்டுமின்றி யாரை வேண்டுமானாலும் தங்கள் படங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நேற்று நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு தீர்மானமும் இயற்றப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர், செயலாளர்கள், துணை தலைவர்கள், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட செயற்குழு கூட்டம் மே இரண்டாம் தேதி நடைபெற்றது. அதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகிய இரு தரப்பினருக்கும் மட்டுமே காலங்காலமாக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆனது இருந்து வருகின்றது.
அந்த வகையில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கடந்த மார்ச் மாதம் ஒன்பதாம் தேதி இருவரும் கையெழுத்திட்டனர். மேற்படி புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை அவமதிக்கும் வகையில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் செயல்பட்டதால், இரு அமைப்பிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று அதாவது மே 2 முதல் ரத்து செய்யப்படுகிறது என்று செயற்குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது .
மேற்படி தீர்மானத்தின் அடிப்படையில் மே 3 ஆம் தேதி முதல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் தங்களுக்கு தேவையான வேலையாட்களை யாரை வேண்டுமானாலும் வைத்து படப்பிடிப்பு பணிகளை மேற்கொள்ளலாம் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout