பெருந்தன்மையுடன் விட்டுவிடுவோம்: அஸ்வின் சர்ச்சை குறித்து பிரபல தயாரிப்பாளர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் நடித்த ’என்ன சொல்ல போகிறாய்’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அவர் பேசிய சர்ச்சைக்குரிய விஷயம் கடந்த இரண்டு நாட்களாக மீம்ஸ்களாக வைரலாகி வரும் நிலையில் இது குறித்து கருத்து கூறிய பிரபல தயாரிப்பாளர் ’பெருந்தன்மையுடன் அதை கடந்து செல்வோம்’ என்று கூறியுள்ளார்
குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் நடித்த ’என்ன சொல்லப் போகிறாய்’ என்ற திரைப்படம் விரைவில் ரிலீஸாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் பாடல் ரிலீஸ் விழா சமீபத்தில் நடந்தது
இதில் தான் 40 கதைகளை கேட்டதாகவும் அந்த கதைகள் எல்லாம் பிடிக்கவில்லை என்பதால் தூங்கி விட்டதாகவும், தான் தூங்காமல் கேட்ட ஒரே கதை ’என்ன சொல்ல போகிறாய்’ தான் என்றும் அவர் கூறினார்
முதல் படம் வெளியாகும் முன்பே அஸ்வினின் சர்ச்சைக்குரிய பேச்சை நெட்டிசன்கள் பலர் மீம்ஸ்களாக போட்டு விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து கூறியதாவது:
சினிமாவில் நாம் பார்க்கும் கதைகளை விட அதிக சுவாரசியங்கள் கதை சொல்லும் நிகழ்வுகளில் உண்டு. பலர் வாழ்வை புரட்டிப்போடும் தருணம் என்பதால் அது சற்றே அந்தரங்கமான விசயமும் கூட. அனுபவக் குறைபாட்டால் நிகழ்ந்த ஓர் சிறுதவறை பெருந்தன்மையுடன் நாம் கடந்து செல்வோமாக. அன்பு உடலுக்கு ஆயுள் அதிகம்’ என்று கூறியுள்ளார்.
சினிமாவில் நாம் பார்க்கும் கதைகளை விட அதிக சுவாரசியங்கள் கதை சொல்லும் நிகழ்வுகளில் உண்டு.பலர் வாழ்வை புரட்டிப்போடும் தருணம் என்பதால் அது சற்றே அந்தரங்கமான விசயமும் கூட. அனுபவக் குறைபாட்டால் நிகழ்ந்த ஓர் சிறுதவறை பெருந்தன்மையுடன் நாம் கடந்து செல்வோமாக. அன்பு உடலுக்கு ஆயுள் அதிகம்!
— SR Prabhu (@prabhu_sr) December 7, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com