'எங்கள் கூட்டத்தின் கடைசி சிங்கிள்': பிரபல இசையமைப்பாளரின் திருமண புகைப்படம் வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் ஒருவரின் திருமணம் இன்று நடைபெற்றதை அடுத்து எங்கள் கூட்டத்தின் கடைசி சிங்கிளுக்கு இன்று திருமணம் ஆகிவிட்டது என தமிழ் நடிகர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
விஜய் சேதுபதி நடித்த ’பண்ணையாரும் பத்மினியும்’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜஸ்டின் பிரபாகரன். அதன் பிறகு ’ஒரு நாள் கூத்து’ ’உள்குத்து’ ’தொண்டன்’ ’தர்மபிரபு’ ’நாடோடிகள் 2’ ’ராதே ஷ்யாம்’ உள்ளிட்ட பல படங்களுக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார்.
இந்த நிலையில் இன்று ஜஸ்டின் பிரபாகரனுக்கு திருமணம் நடந்ததை அடுத்து தமிழ் திரையுலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான பாலசரவணன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் திருமண புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் ’எங்கள் கூட்டத்தின் கடை சிங்கிள் இன்று முதல் சங்க உறுப்பினர் ஆகிறார் என்றும் வாழ்த்துக்கள் நண்பா என்றும் வாழ்க வளமுடன் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com