தமிழ் திரையுலக ஹீரோவுக்கு திருமணம்.. திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் வாழ்த்து..!

  • IndiaGlitz, [Saturday,July 13 2024]

தமிழ் திரை உலகின் ஹீரோவுக்கு திருமணம் நடந்துள்ளதை அடுத்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரை உலகில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ’மெட்ரோ’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் சிரிஷ். இந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து அவரை மெட்ரோ சிரிஷ். என்றே ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.

இந்த படத்திற்காக அவருக்கு சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ’மெட்ரோ’ வெற்றியை அடுத்து ’ராஜா ரங்குஸ்கி’ ’ப்ளடி மணி’ ’பிஸ்தா’ உள்ளிட்ட படங்களில் சிரிஷ் நடித்துள்ளார்.

இந்த நிலையில் மெட்ரோ சிரிஷ் தான் காதலித்த ஹஸ்னா என்ற பெண்ணை நேற்று திருமணம் செய்து கொண்டார். உறவினர்கள் நண்பர்கள் மற்றும் பெரியோர்களின் ஆசியுடன் இந்த திருமணம் நடந்த நிலையில் திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் நேரில் வந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். திருமணம் குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.