15 படங்களுக்கும் மேல் இயக்கிய தமிழ் இயக்குனர் காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி...!

  • IndiaGlitz, [Sunday,February 05 2023]

கடந்த சில நாட்களாக திரையுலகை சேர்ந்தவர்கள் காலமாகி வருவதை அடுத்து திரையுலகினர் அதிர்ச்சியில் இருக்கும் நிலையில் இன்று 15 படங்களுக்கு மேல் இயக்கிய தமிழ் இயக்குனர் ஒருவர் காலமானதை அடுத்து திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் நேற்று காலமானார் என்ற அதிர்ச்சியில் இருந்து திரையுலகினர் இன்னும் மீளவில்லை. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னால் ’பரியேறும் பெருமாள்’ படத்தில் நடித்த நாட்டுப்புற கலைஞர் தங்கராஜ், பழம்பெரும் இயக்குனர் கே. விஸ்வநாத், நடிகை ஜமுனா, குண சித்திர நடிகர் இ ராமதாஸ் ஆகியோர்களின் மறைவு திரையுலகினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இந்த நிலையில் இன்று தமிழ் திரையுலகில் 15 படங்களுக்கு மேல் இயக்கிய இயக்குனர் டிபி கஜேந்திரன் காலமானார். அவருக்கு வயது 68. இந்த நிலையில் மறைந்த டிபி கஜேந்திரன் அவர்களுக்கு திரையுலகினர் தங்களுடைய சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

கடந்த 1988 ஆம் ஆண்டு ’வீடு மனைவி மக்கள்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான டிபி ராஜேந்திரன் அதன் பிறகு ’எங்க ஊரு காவல்காரன்’ ’பாண்டி நாட்டு தங்கம்’ ’எங்க ஊரு மாப்பிள்ளை’ ’நல்ல காலம் பொறந்தாச்சு’ உள்பட பல திரைப்படங்களை இயக்கினார். அதுமட்டுமின்றி ஏராளமான திரைப்படத்தில் அவர் நகைச்சுவை மற்றும் குணசேத்திர கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.